ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லும்
மனநல மருத்துவர்கள்
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, ஏதோ மனநோய் ஒன்றினால்,
பாதிக்கப்பட்டுள்ளதாக தாம் உணருவதாக
கூறி, மனநல
மருத்துவர்கள் சிலர் எதிர்வரும் 10 ஆம் திகதி
நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி
கடந்த சில
மாதங்களாக நடந்துக்கொண்ட
விதத்தை ஆராயும்
போது தாம்
இதனை உணர்வதாகவும்
ஜனாதிபதியை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த
வேண்டும் எனவும்
இந்த மருத்துவர்கள்
கருதுகின்றனர்.
ஏதோ
ஒரு வகையில்,
ஜனாதிபதிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள
போர் மற்றும்
சமாதானத்தை அறிவிக்க முடியும். அப்படியான உத்தரவு
எதனையும் பிறப்பித்தால்,
நாட்டின் தேசிய
பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் இந்த
மனநல மருத்துவர்கள்
கருதுவாக கூறப்படுகிறது.
அதேவேளை
அண்மையில் ஊடக
சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ஹிருணிக்கா பிரேமச்சந்திர, ஜனாதிபதிக்கு
மருத்துச் சிகிச்சை
வழங்க நடவடிக்கை
எடுக்குமாறு ஜனாதிபதியின் பாரியார் ஜெயந்தியிடம் கோரிக்கை
விடுத்திருந்தார்.
0 comments:
Post a Comment