உச்சநீதிமன்றத் தீர்ப்பு
இது இவர்களின் கருத்து
நாடாளுமன்றத்தைக்
கலைத்து ஜனாதிபதி
வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு, சட்டவிரோதமானது
என்று, உச்சநீதிமன்றம்
அளித்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
குறித்து, இந்த
வழக்கில் முன்னிலையான
சட்டவாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சியும்,
வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
ஒரு
மனதாக அளிக்கப்பட்ட
தீர்ப்பையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஜனநாயகம்
மீண்டும் வெற்றி
பெற்றிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த தீர்ப்பை மதித்து,
அதன்படி செயற்படுவார்கள்
என்று நம்புகிறோம்
-இரா.சம்பந்தனின் சட்டவாளர் கனகஈஸ்வரன்
உச்சநீதிமன்றம்
குறுகிய நாட்களில்
விசாரித்து இந்த வரலாற்றுத் தீர்ப்பை ஒருமனதாக
அறிவித்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றில் அளிக்கப்பட்ட
மிக முக்கியமான
தீர்ப்பு.
-சட்டவாளர் எம்.ஏ.சுமந்திரன்
அரசியலமைப்புக்கு
எதிரான சர்வாதிகாரத்துக்கு
கொடுக்கப்பட்ட பாரிய அடி இது.
-தி இந்து ஆசிரியர் என்.ராம்
எமது
நாடு இன்னமும்
நம்பிக்கையின் நிலமாக இருக்கிறது என்பதை, உச்சநீதிமன்றத்தின்
இன்றைய தீர்ப்பு
காட்டுகிறது. ஒரு சுதந்திரமான நீதித்துறை ஒரு
நாட்டுக்கு எதைச் செய்யலாம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
-சட்டவாளர் சாலிய
பீரிஸ்
நீதிமன்றத்தின்
இந்த தீர்ப்பை
ஜனாதிபதி மதித்து
செயற்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம். மக்களின்
இறையாண்மை மதிக்கப்பட
வேண்டும்..”
-
ஐ தே க தலைவர் ரணில் விக்கிரமசிங்க
இந்த
நீதியான தீர்ப்புடன் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இன்று அரசியலமைப்பு பலமானது..
ஜனநாயகம் உறுதியானது .ஆனால் இந்த வெற்றியை நாங்கள் அமைதியாக கொண்டாட வேண்டும்..தேவையற்ற
ஆலோசனைகளை கேட்டு இனியும் ஜனாதிபதி செயற்படக் கூடாது.இது நாட்டுக்கு கிடைத்த வெற்றி.ரணிலை
மீண்டும் பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுங்கள். இனியும் இந்த நாடகம் வேண்டாம்.நாட்டை
பற்றி நினையுங்கள்.
- சஜித் பிரேமதாச
ஜனாதிபதி
மைத்திரி இப்போதாவது கண்விழிக்க வேண்டும்.
- ராஜித சேனரத்ன
மைத்ரி
- மஹிந்த ஜனநாயக விரோத பயணம் முடிவுபெற்றது - ஜனநாயகத்தை இனி நிலைநாட்ட வேண்டும்
- அனுர குமார திசாநாயக்க
0 comments:
Post a Comment