இன்று பதவி விலகுகிறார் மஹிந்த
உறுதிப்படுத்தினார் நாமல்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி, பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ, இன்று பதவியில் இருந்து விலகவுள்ளார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய விட்டு, மஹிந்த ராஜபக்ஸ இன்று பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

நாட்டின் உறுதி நிலையை உறுதிப்படுத்துவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று, நாமல் ராஜபக்ஸ டிவீட்டர் பதிவில் கூறியுள்ளார்.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ஸவின் மனு மீது இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க  உச்சநீதிமன்றம், நேற்று மாலை மறுத்ததை அடுத்து, ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்ற மஹிந்த ராஜபக்ஸ அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



       
To ensure stability of the nation, Former President has decided to resign from the Premiership tomorrow after an address to the nation. The SLPP with Frm President, SLFP & others will now work to form a broader political coalition with President Sirisena.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top