’சம்பந்தன்-ரணில் இடையே ஒப்பந்தம் இல்லை’
அது போலியானது என்பது
எடுத்த எடுப்பிலேயே தெரிகிறது.
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு,
ஐக்கிய தேசியக்
கட்சிக்கு, பலமுறை தமது ஆதரவு வழங்கியுள்ளதெனத்
தெரிவித்த நாடாளுமன்ற
உறுப்பினர் அஜித் பீ பெரேரா, சம்பந்தன்
- ரணில் இடையே
ஒப்பந்தம் எவையும்
இல்லையெனவும் கூறினார்.
அலரி
மாளிகையில், இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு
கூறினார்.
அங்கு
தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும்
ஐக்கிய தேசியக்
கட்சிக்கும் இடையில், எந்தவித ஒப்பந்தங்களும் இல்லையெனவும்
வரவு - செலவுத்
திட்டம் உள்ளிட்ட
பல சந்தர்ப்பங்களில்,
கூட்டமைப்பு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது என்றும்
தெரிவித்தார்.
இவ்வாறான
நிலையில், லக்ஷ்மன்
யாப்பா அபேவர்தன
எம்.பி,
கூட்டமைப்புடன் ஐ.தே.க இரகசிய
ஒப்பந்தம் செய்துகொண்ட
போலி ஆவணம்
ஒன்றை வெளிப்படுத்தியதாகக்
கூறிய அஜித்
பி.பெரேரா,
லக்ஷ்மன் யாப்பா
எம்.பி
க்கு எதிராக,
ஐக்கிய தேசியக்
கட்சியினால், பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
என்றும் கூறினார்.
ஐக்கிய
தேசியக் கட்சியும்
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பும் செய்த ஒப்பந்தத்தின் பிரதி என்று
ஒரு ஆவணம்
சமூக ஊடகங்களில்
- வலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது...
அது
போலியானது என்பது
எடுத்த எடுப்பிலேயே
தெரிகிறது.
இதன்
தயாரிப்பாளர்கள் சம்பந்தன் ஒரு சிங்கள ஒப்பந்தத்தில்
கையொப்பம் வைப்பாரா
என்று கூட
யோசிக்கவில்லை...
இப்படியான
போலிகளால் தான்
நாடு நாசமாகிக்
கொண்டிருக்கிறது என மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment