பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மஹிந்த




பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகி விட்டதாக, ஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் விஜேராம மாவத்தை இல்லத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில்,மஹிந்த ராஜபக்ஸ தனது பதவி விலகல் தொடர்பாக அறிவித்துள்ளார்.

அந்த நிகழ்வில், அவரது ஆதரவாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில், பதவி விலகல் கடிதத்தில்  கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆசி வழங்கும் பௌத்த மத அனுஷ்டானங்கள் இடம்பெற்று வருகின்றன.

புதிய பிரதமரை ஜனாதிபதி நியமிப்பதற்கு, இடமளிப்பதற்காகவே, தாம் பதவியில் இருந்து விலகியுள்ளதாக, மஹிந்த ராஜபக்ஸ கூறினார் என, அவரது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஷெகான் சேமசிங்க தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சர்ச்சைக்குரிய வகையில் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ, 50 ஆவது நாளில் பதவியை விட்டு விலகியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்காத- அலரி மாளிகையில் வசிக்காதமேன்முறையீட்டு நீதிமன்றினால், பிரதமராக செயற்பட முடியாமல் தடுக்கப்பட்ட பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ இந்த 50 நாட்களையும் கழித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top