மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புகள்
1499 – 1719 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை
மன்னார்
நகர நுழைவாயிலில்
கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப்
புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு, அமெரிக்காவில் கார்பன்
பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட ஆறு எலும்புக் கூடுகளும்,
1499 – 1719 ஆண்டுகளுக்கிடையில் புதைக்கப்பட்டவை என்று
தெரியவந்துள்ளது.
மன்னார்
மனித புதைகுழியில்
இருந்து மீட்கப்பட்ட
335 மனித எலும்புக்கூடுகளில்,
6 எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு
செய்யப்பட்டு, புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகத்தில்
றேடியோ கார்பன்
பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
இந்த
மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை மன்னார் நீதிமன்றத்துக்கு
அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கமைய,
இந்த ஆறு
எலும்பு மாதிரிகளும்
1499 – 1719 ஆண்டுகளுக்கிடையில் புதைக்கப்பட்டவை என்று
கண்டறியப்பட்டுள்ளது.
இந்த
நிலையில் புதைகுழி
அகழ்வைத் தொடருவதா
நிறுத்துவதா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை
என்றும், முடிவு
எடுக்கப்படும் வரையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும்
என்றும் சட்ட
மருத்துவ அதிகாரி
சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment