2019 ஆம் ஆண்டை

 இராணுவ ஆண்டாக பிரகடனம்


2019 ஆம் ஆண்டை இராணுவ ஆண்டாகப் பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டே, இந்த ஆண்டை இராணுவ ஆண்டாகப் பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இராணுவத்தினரை கௌரவிக்கும் நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

இதன் முதல் கட்டமாக, இராணுவ கொடி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொடியை ரணவிறு சேவா அதிகார சபையின் தலைவரான, முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அணிவித்தார்.
.
2018ஆம் ஆண்டிற்கான இராணுவ கொடி வருமானம் மாகாண ஆளுநர்களினால் இதன்போது உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி அதனை ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவரிடம் கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டிற்கான இராணுவ கொடிகளை ஜனாதிபதி மாகாண ஆளுநர்களிடம் கையளித்தார்.

இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, விஜேயதாச ராஜபக்ஸ, மஹிந்த அமரவீர உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள். மாகாண முதன்மை செயலாளர்கள், முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை பிரதானிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top