கல்முனை தமிழ் பிரதேச செயலக
இந்துக் கோவில் விவகாரம்
நீதிமன்றத் தீர்ப்பு ஏப்ரல் 30
கல்முனை
தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் உள்ள இந்துக் கோவிலை அகற்ற உத்தரவிடக் கோரி
கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ. எம். றகீப்பால் கல்முனை நீதவான்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 30ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு
கல்முனை நீதிவான் நீதிமன்றில் இன்று (12)
எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில்
நீதிமன்றத்தின் கட்டளை எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை
தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் உள்ள இந்துக் கோவில் நகர அபிவிருத்தி அதிகார
சபையின் அனுமதி பெறப்படாமல் கட்டப்படுகின்ற சட்டவிரோத கட்டிடம் இது என்றும்
உள்ளூராட்சி சபைகளுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை கையளித்து உள்ள
அதிகாரத்தின்படி இக்கட்டிடத்தை இடிக்க கோருகின்ற உரிமை அவருக்கு உள்ளது என்றும்
முதல்வர் றஹீப் சார்பாக நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இச்சட்டவிரோத
கட்டிடத்தின் நிர்மாணத்தை ஆட்சேபித்து இவரால் அனுப்பப்பட்ட இரு கடிதங்களுக்கு
தமிழ் பிரிவு பிரதேச செயலாளரால் பதில் விளக்கம் தரப்படாத நிலையிலேயே நீதிமன்றத்தை
நாடி வந்து உள்ளார் என்றும் சமர்ப்பணத்தில் தெரிவிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment