நியூசிலாந்து பள்ளிவாசல் சம்பவம்;
பலி எண்ணிக்கை
50ஆக உயர்வு
நியூஸிலாந்து
கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களில்
நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ள நிலையில்,
அதில் 5 பேர்
இந்தியர்கள் என்பதை அங்குள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.
கிறிஸ்ட்சர்ச்
நகரில் உள்ள
இரு பள்ளிவாசல்களில்
கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை
நடந்துகொண்டிருந்தபோது அங்கு வந்த
துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக
சுட்டதில் 50 பேர் பலியானார்கள். இந்தத் தாக்குதல்
தொடர்பாக இதுவரை
ஒரு பெண்
உட்பட 4 பேர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளை
இனவெறி பிடித்த
பயங்கரவாதி ஒருவன், துப்பாக்கியால் சுடுவதை ஃபேஸ்புக்கில்
நேரலை செய்துள்ளான்.
அதன்பின் அவனை
அடையாளம் கண்டுபிடித்து
கைது செய்ததில்,
அவுஸ்திரேலியாவில் பிறந்த பிரன்டன்
டாரன்ட்(வயது28)
என்பது தெரிந்தது.
இந்நிலையில்,
கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அனைத்தும்
அடையாளம் காணப்பட்டு
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலில்
9 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். ஆனால், 5 பேர்
கொல்லப்பட்டதை மட்டும் நியூசிலாந்தில் உள்ள இந்தியத்
தூதரகம் உறுதி
செய்துள்ளது. அதேநேரம், உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள்
தற்போது வெளியாகியுள்ளன.
பலஸ்தீனத்தைச்
சேர்ந்த 19பேர்,
இந்தோனேசியாவைச் சேர்ந்த 6 பேர், துனிஷியா 05, பங்களாதேஷ்
05, மொரொக்ேகா 4, எமன் 3, ஈராக் 2, ஜோர்தான் 2, பாகிஸ்தான்
2, சிரியா, ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா
ஆகிய நாடுகளில்
ஒருவர் வீதம்
மொத்தமாக 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே
தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி, தாக்குதல் நடத்தும்
முன், 74 பக்கத்தில்
கோரிக்கை மனு
ஒன்றை நியூஸிலாந்து
பிரதமர் உள்ளிட்ட
சிலருக்கு அனுப்பியுள்ளான்.
ஆனால், அதில்
என்ன குறிப்பிடப்பட்டு
இருந்தது என்பது
தெரிய வரவில்லை.
0 comments:
Post a Comment