வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய
இலங்கையில் 7 இலட்சம் ரூபாவினால்
அதிகரித்துள்ள வாகனங்களின் விலைகள்!



இலங்கையில் வாகனங்களின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரன்சிகே தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று முன்வைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் hybrid வாகனங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக விலை அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய Wagon R ரக கார் ஒன்று 250,000 ரூபாயிலும் எல்டோ ரக கார் ஒன்று 150,000 ரூபாயிலும் அதிகரிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக எக்சியோ ரக கார் ஒன்று 600,000 ரூபாயில் அதிகரிக்கவுள்ளது. பிரிமியர் மற்றும் CHR ரக கார் 700,000 ரூபாயிலும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சொகுசு வரி ஒன்று முதல் முறையாக விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமையவும் வாகனங்களின் விலை அதிகரிக்குமா என்பதனை ஆராய்ந்து விரைவில் பொது மக்களுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top