கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம்
தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது



திருகோணமலை - கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 08 ஆம் திகதி முதல் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலை இலங்கையின் 361 ஆவது தேசிய பாடசாலை என்பதும் திருகோணமலை மாவட்டத்தின் 11 ஆவது தேசிய பாடசாலை என்பதும் அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பெண்கள் தேசிய பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் பெண் பிள்ளைகளின் கல்வியின் முன்னேற்றத்திற்கு வழி கோலும் என்பதை தான் திடமாக நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திருகோணமலையில் அன்மமையில் ஏற்பட்ட ஆசிரியைகளின் அபாயா பிரட்சனைகள் போன்ற இன முரண்பாடுகள் எதிர்காலத்தில் ஏற்படுவதை தவிர்க்கவும் தேசிய இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்தப்படும் போது எமது ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தவிர்க்கவும் இது மாற்று வழியாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் இப்பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top