''பொறுத்தது
போதும்''மஹிந்தவின் கண்டி பேரணி
– மைத்திரியும் வரவில்லை
சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும் பங்கேற்கவில்லை.
''பொறுத்தது
போதும் ''அரசாங்கத்துக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸவின்
தலைமையில் கண்டியில்
நேற்று சிறிலங்கா
பொதுஜன முன்னணியினால்
நடத்தப்பட்ட பேரணியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ,
சிறிலங்கா சுதந்திரக்
கட்சியினரோ பங்கேற்கவில்லை.
முன்னதாக,
சிறிலங்கா பொதுஜன
முன்னணியுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்தே
இந்தப் பேரணியை
நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அத்துடன்,
கோத்தாபய ராஜபக்ஸ
முதல் முறையாக
இந்தப் பேரணியில்
அரசியல் மேடையில்
ஏறவுள்ளதாகவும் கூறப்பட்டது.
எனினும்,
தமக்கு அழைப்பு
வரவில்லை என்றும்,
தாம் இந்தப்
பேரணியில் பங்கேற்கப்
போவதில்லை என்றும்
கோத்தாபய ராஜபக்ஸ
அறிவித்திருந்தார்.
அதேவேளை
சிறிலங்கா சுதந்திரக்
கட்சிக்கும், சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில்
நடத்தப்பட்ட கூட்டணி பேச்சுக்கள் இன்னமும் இறுதி
செய்யப்படாத நிலையில், இந்த பேரணியை சிறிலங்கா
சுதந்திரக் கட்சி தவிர்த்துக் கொண்டுள்ளது.
தமது
கட்சியைச் சேர்ந்த
எவரையும் இந்தப்
பேரணியில் பங்கேற்கக்
கூடாது என்று
சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தடுத்துள்ளார்.
இதனால்
நேற்று நடந்த
பேரணியில் கூட்டு
எதிரணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் மாத்திரமே
பங்கேற்றிருந்தனர்.
0 comments:
Post a Comment