வீட்டிலேயே செய்யலாம் 
பேரீச்சம்பழ கேக்
செய்வது எப்படி?

   
குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் பேரீச்சம் பழம் சேர்த்து கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வீட்டிலேயே செய்யலாம் பேரீச்சம்பழ கேக்
தேவையான பொருட்கள் :

மைதா - இரண்டரை கப்,
 வெண்ணெய் - ஒன்றேகால் கப்,
பால் - ஒன்றரை கப்,
கண்டன்ஸ்டு பால் - 1 டின் (400 மிலி),
பேரீச்சம்பழம் (பொடியாக நறுக்கியது) - அரை கப்,
ஆப்ப சோடா - 1 டீஸ்பூன் (தலைதட்டி),
பேக்கிங்சோடா - 2 டீஸ்பூன் (தலை தட்டி),
வெனிலா எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்.



செய்முறை :

2 டீஸ்பூன் மைதாவை தனியே எடுத்து வைத்துவிடுங்கள்.

பின்னர் மீதி இருக்கும் மைதாவுடன் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்.

பேரீச்சம்பழத்தில் 2 டீஸ்பூன் மைதா சேர்த்து பிசறி வையுங்கள்.

சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழையுங்கள்.

பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள்.

அத்துடன் பாலையும் மைதா, எசன்ஸையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

கடைசியில் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவி, மைதா தூவிய ஒரு ட்ரேயில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள்.

இப்போது சூப்பரான பேரீச்சம்பழ கேக் தயார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top