சாய்ந்தமருதிற்கான
தனியான நகரசபை கோரிக்கை:
பல்லாயிரக்கணக்கான
மக்கள் கலந்து கொண்ட
அமைதி ஆர்ப்பாட்டம்
நியாயமான கோரிக்கையை முன்வைத்து கோஷம்
சாய்ந்தமருதிற்கு
தனியான நகரசபை கோரிக்கையை முன் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் இன்று
2019.03.15 ஆம் திகதி ஜும் ஆத் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்
வளாகத்தினுள்ளும் பிரதான வீதியிலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் அமைதியாக
இடம்பெற்றது.
இந்த
அமைதி ஆர்ப்பாட்டம் சாய்ந்தமருது – மாளிகைக்காடு
ஜும்ஆப் பெரிய
பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்திருக்கும்
மக்கள் பணிமனையால்
ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
“தலைமை தந்த சாய்ந்தமருது மக்களின் தகைமையை தடுக்காதே,
பகைமையை வளர்த்து எங்களின் பலத்தை பரீட்சிக்காதே”, “விடியலுக்கான எங்கள் போராட்டம்
விடை காணும் வரை ஓயாது, தடைகள் வந்து சூழ்ந்தாலும் இப்படை முகில் நகராது”, “எங்களுக்கான
நகரசபை கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்”, எங்களைப் படைத்த அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றான்
இன்ஷா அல்லாஹ் அவனின் உதவியால் எங்கள் சபையை பெற்றெடுப்போம்”, “எங்களுக்கு வேண்டும்
தனியான சபை”
“சாய்ந்தமருது
மக்களின் ஜனநாயகத்திற்கு மதிப்பளி, மருதூரின் ஜனநாயகத்தை சீரழிக்காதே” , “உங்கள்
கதிரையின் ஆசனம் எங்கள் உரிமையின் சாசனம் நகர சபைதான் கேட்கின்றோம் இன்றுள்ள நரக
சபை அல்ல,” நாங்கள் கல்முனைக்கு எதிரானவர்கள் அல்ல,என்றும் தோள் கொடுப்போம்” எமது
நல்லுறவுக்காக., கருவாக்கிய எங்களிடம் கல்லறையைக் காட்டாதே! உருவாக்கிய எங்களின்
உரிமையைத் தடுக்காதே!!”
என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் ஏந்தியிருந்தனர்.
ஜனாதிபதி,
பிரதமர் மற்றும் , இலங்கை அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும்
எடுத்துக் கூறி அழுத்தம் கொடுக்கும் வகையில்
ஒழுங்கு செய்யப்பட்டிருந்த
மேற்படி ஆர்பாட்டத்தில்
ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்துகொண்டு மிகவும் அமைதியான
முறையில் தங்கள் நியாயமான கோரிக்கை முன்வைத்தனர்.
0 comments:
Post a Comment