பலஸ்தீனத்திற்கான
1 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்
நன்கொடையைக் கையளித்தார் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ
ஐக்கிய
நாடுகள் பொதுச்சபையின்
69வது அமர்விற்கு
ஓரமாக பலஸ்தீன
ஜனாதிபதி மஹ்மூட்
அப்பாஸை (Mahmoud Abbas) இன்று பிற்பகல்
சந்தித்தபோது பலஸ்தீனத்திற்கான இலங்கையின்
1 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் நன்கொடையை
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ
உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
பலஸ்தீனத்தின்
நீண்டகால ஆதரவாளரும்,
பலஸ்தீன கூட்டொருமைப்பாட்டுக்கான
இலங்கைச் செயற்குழுவின்
ஸ்தாபகத் தலைவருமான
ஜனாதிபதி ராஜபக்ஷ, இவ்வாண்டு
ஆகஸ்ட் மாதத்தில்
இந்த நன்கொடையை
அறிவித்தார்.
இந்தச்
சந்திப்பின்போது, இலங்கையின் ஆதரவை, குறிப்பாக பலஸ்தீன
மக்களின் பிரச்சினைகளுக்கான
ஜனாதிபதியின் தொடர்ந்த அர்ப்பணிப்பையும்,
தானும், பலஸ்தீன
மக்களும் எவ்வளவு
நன்மதிப்பைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை
ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி
அப்பாஸ் தெரிவித்தார்.
மேற்குக் கரை,
காஸா இரண்டிலும்
தற்போதைய நிலைமை
குறித்தும், அந்தப் பிராந்திய மக்கள் எதிர்கொள்ளும்
சவால்கள் குறித்தும்
ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதி
அப்பாஸ் குறிப்பிட்டார்.
2005ம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதியாகப்
பதவியேற்றதிலிருந்து, தனது ஆறு
ஐநா பொதுச்சபை
உரைகளின் போதும்,
ஒவ்வொரு தடவையும்
பலஸ்தீன தேசத்தை
ஜனாதிபதி ஆதரித்து
வந்துள்ளார். இவ்வாண்டும் அவர் அதனைச் செய்திருந்தார்.
"மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள வன்முறை
மிகவும் வேதனை
தருகிறது," என முன்னைய நாள் இடம்பெற்ற
பொதுச்சபைக்கான தனது உரையில் ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.
"இறையாண்மை மிக்க, சுதந்திரமான, ஈடேறக்கூடிய, ஒற்றுமையான
பலஸ்தீன தேசத்தின்
விரைவான சாத்தியப்பட்டிற்கான
இலங்கையின் ஆதரவை நான் மீள வலியுறுத்துவதோடு,
இது பாதுகாப்பான,
அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளோடு, இஸ்ரேலோடு
அருகில், சமாதானமாக
அமைய வேண்டும்.
ஐநா இல்
பலஸ்தீனத்தை முழு உறுப்பினராக விரைவில் வரவேற்பதற்கு
எதிர்பார்த்திருக்கிறோம்."
இவ்வாண்டு
ஜனவரியில் ஜனாதிபதி
ராஜபக்ஷ
அப்பிராந்தியத்திற்கான சுற்றுப்பயணத்தின் போது பலஸ்தீனத்திற்கான தனது முதலாவது
விஜயத்தை மேற்கொண்டதோடு,
அந்த விஜயத்தில்
ஜோர்தான், இஸ்ரேல்
ஆகியனவும் உள்ளடங்கியிருந்தன.
இந்த விஜயத்தின்போது
பலஸ்தீனத்திற்காக தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் ஆதரவுக்காக,
பலஸ்தீனத்தீன தேசத்தின் அதியுயர் விருதான "பலஸ்தீனத்தின்
நட்சத்திரம்" என்ற விருதை
பலஸ்தீன அரசு
ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு அளித்திருந்தது.பலஸ்தீனத்தை ஒரு
தேசமாக 1988 இல் இலங்கை அங்கீகரித்தது.
வெளிவிவகார
அமைச்சின் கண்காணிப்புப்
பாராளுமன்ற உறுப்பினர் திரு. சஜின் த
வாஸ் குணவர்தன,
ஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க,
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி. ஷெனுகா
செனவிரத்ன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப்
பிரதிநிதி கலாநிதி.
பாலித கோஹன
ஆகியோர் இந்தக்
கூட்டத்தில் பங்குகொண்டனர்.
0 comments:
Post a Comment