ஊவா மாகாண
சபைத் தேர்தலில்
34269 வாக்குகள் நிராகரிப்பு
நடந்து
முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்தவர்களில் 34 ஆயிரத்து 269 பேர் அளித்த
வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன எனத் தேர்தல்கள்
செயலகம் தெரிவித்துள்ளது.
பதுளை
மாவட்டத்தில் வாக்களித்தவர்களில் 21 ஆயிரத்து 398 வாக்குகளும் மொனராகலை மாவட்டத்தில்
வாக்களித்தவர்களில் 12 ஆயிரத்து 871 வாக்குகளும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
பதுளை
மாவட்டத்தில் பதுளை தேர்தல் தொகுதியில் 1344 வாக்குகளும் பசறை தேர்தல் தொகுதியில்
2783 வாக்குகளும் ஊவா- பரனகம தேர்தல் தொகுதியில் 2023 வாக்குகளும் ஹாலி-எல தேர்தல்
தொகுதியில் 2746 வாக்குகளும் வெலிமட தேர்தல் தொகுதியில் 2094 வாக்குகளும் பண்டாரவளை
தேர்தல் தொகுதியில் 2690 வாக்குகளும் ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் 2696 வாக்குகளும்
மஹியங்கனய தேர்தல் தொகுதியில் 2449 வாக்குகளும் வியலுவ தேர்தல் தொகுதியில் 2034 வாக்குகளும்
தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளில் 539 வாக்குகளும்
மொனராகலை
மாவட்டத்தில் வெல்லவாய தேர்தல் தொகுதியில் 4998 வாக்குகளும் மொனராகலை தேர்தல் தொகுதியில்
4413 வாக்குகளும் பிபில தேர்தல் தொகுதியில் 3136 வாக்குகளும் தபால் மூலம் அளிக்கப்பட்ட
வாக்குகளில் 324 வாக்குகளும் வாக்காளர்கள் வாக்களித்ததில் ஏற்பட்ட தவறுகளினால் இவ்வாறு
நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
0 comments:
Post a Comment