பதுளை மாவட்டத்தில் 5.8%, மொனராகலை மாவட்டத்தில் 2.2% இஸ்லாமியர்கள்

முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டணிக்கு 

கிடைத்த வாக்குகள் 1.14 சதவீதம் மாத்திரமே




பதுளை மாவட்டத்தில் 5.8 சதவீதமும் மொனராகலை மாவட்டத்தில் 2.2 சதவீதமும் இஸ்லாமியர்கள் வாழ்கின்றார்கள். முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் 1.14 சதவீதம் மட்டுமே
நடைபெற்று முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் 9 தேர்தல் தொகுதிகளிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத் தலைமையில் கூட்டணியாக ஊவா மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது. கூட்டணியினர் மொத்தமாக 5045 வாக்குகளை மாத்திரமே பெற்றனர். இக்கூட்டனியால் ஆசனம் பெறமுடியவில்லை.
இக்கூட்டணியினரால்
வெலிமடை தேர்தல் தொகுதியில் 2363 வாக்குகளும்
ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் 812 வாக்குகளும்
பசறை தேர்தல் தொகுதியில் 488 வாக்குகளும்
பதுளை தேர்தல் தொகுதியில் 336 வாக்குகளும்
பண்டாரவளை தேர்தல் தொகுதியில் 321 வாக்குகளும் 
ஊவா-பரணகம தேர்தல் தொகுதியில் 307 வாக்குகளும்
ஹாலிஎல தேர்தல் தொகுதியில் 160 வாக்குகளும்
வியலுவ தேர்தல் தொகுதியில் 117 வாக்குகளும்
மஹியங்கன தேர்தல் தொகுதியில் 79 வாக்குகளும்
தபால் வாக்குகளாக 62 வாக்குகளும் 
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக ஐக்கிய முன்னணிக்கு கிடைத்துள்ளன. இது மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 1.14% சத வீதமாகும்.

பதுளை மாவட்டத்தில் மொத்த சனத்தொகையில் 5.8 சத வீத இஸ்லாமியர்களும் மொனராகலை மாவட்டத்தில் 2.2 சத வீத இஸ்லாமியர்களும் வாழ்ந்த்து கொண்டிருப்பதாக  தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் இறுதியாக 2012 ஆம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பில் தெரிவித்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top