ஊவா மாகாண சபையில்
குடும்ப அரசியல்
கடந்த
20 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற ஊவா மாகாணசபைக்கான தேர்தலில் குடும்பர அரசியலின்
ஆதிக்கமே அதிகமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊவா
மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களில்
6 பேர் அரசியல்வாதிகளின் உறவினர்களாவர். இவர்களில் அதிகமானோர் தற்போது பாராளுமன்றத்தில்
அங்கம் வகிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மொனராகலை மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் தெரிவாகியுள்ள
ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சஷிந்திர
ராஜபக்ஸ சபாநாயகர் சமல் ராஜபக்ஸவின் புதல்வராவார்.
அவர் மெனராகலை மாவட்டத்தில் விருப்பு வாக்குப் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ள நிலையில்
குமாரசிறி ரத்னாயக்க இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். குமாரசிறி ரத்னாயக்க அமைச்சர்
சுமேதா ஜீ ஜயசேனவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் சுமேதா ஜீ ஜயசேனவின்
மகன் சாலிய சுமேத சில்வாவும் இம்முறை மொனராகலை மாவட்டத்தில் இருந்து ஊவா மாகாண சபைக்கு
தெரிவாகியுள்ளார். அத்துடன் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸாவின் மகனான உதார சொய்ஸாவும்
இம்முறை மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை முன்னாள் அமைச்சர் தர்மதாஸ
பண்டாவின் மகன் ஹரீன் தர்மதாஸ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் மாகாண
சபைக்கு தெரிவாகியுள்ளார்.
0 comments:
Post a Comment