உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். போராளிகள் மீது
பயங்கர தாக்குதல் போராளிகள் பலர் மரணம்
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளை குறிவைத்து அமெரிக்காவும், அதன் அரபு நாட்டு நண்பர்களும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் பல போராளிகள் பலியாகியுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
உலகையே
அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளை
குறிவைத்து சிரியாவில், அமெரிக்கா தனது அரபு
நட்பு நாடுகளுடன் கூட்டு சேர்ந்து வான்தாக்குதல்களை நேற்று தொடங்கியது. ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் தலைநகராக
கருதப்படக்கூடிய ரக்கா மற்றும் டெய்ர் அல்
ஜோர், ஹசகா
நகரங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் நிலைகளை
குறி வைத்து
இந்த தாக்குதல்
நடத்தப்பட்டது. ஒரு புறம் போர் விமானங்கள்
குண்டு மழை
பொழிந்தன. மற்றொரு
புறம் டோமஹாக்
ஏவுகணைகள் வீசப்பட்டன
என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த
தாக்குதல்களில் குறைந்தது 70 போராளிகள் உயிரிழந்ததாகவும், 200–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும்
சிரியாவை சேர்ந்த
மனித உரிமை
கண்காணிப்பகம் கூறுகிறது. இந்த தாக்குதல்களில், அமெரிக்கா
மீது தாக்குதல்
நடத்த சதித்திட்டம்
தீட்டி இருந்த
முக்கிய போராளிகள்
பலர் கொல்லப்பட்டு
விட்டனர். சிரியாவில்
அமெரிக்காவும், அரபு நாட்டு நண்பர்களும் நடத்திய வான்வழி
தாக்குதலில், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த
திட்டமிட்ட முக்கிய போராளிகள் கொல்லப்பட்டனர். கட்டிடங்கள்
இடிந்து விழுந்தன.
இத்தகவலை அமெரிக்க
இராணுவ தலைமையகமான
‘பென்டகன்’ செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து
அங்கு போராளிகளை
குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதல்
இன்று இரண்டாவது
நாளை எட்டியுள்ளது.
0 comments:
Post a Comment