காரைதீவு முச்சந்தி ஸியாரம்

தமிழ் சகோதரர்களால் எழுதப்பட்டுள்ள சில விடயங்கள்

காரைதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச கலாசார பேரவையினால் 20. 08. 2009 ஆம் திகதி நடைபெற்ற காரைதீவு பிரதேச கலாசார விழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘‘காரணீகம்‘‘ எனும் சிறப்பு மலரில் மேற்படி ஸியாரம் சம்பந்தமாக தமிழ் சகோதரர்களால் எழுதப்பட்டுள்ள சில விடயங்கள் வருமாறு.
காரைதீவு ஆலயங்களின் வரலாறு எனும் தொடரில் 192 ஆம் பக்கம் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
‘‘ 1830.10.18ஆந் தகதிய உறுதிப்படி சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான காரைதீவு முச்சந்தி உள்ள காணியில் இச்சியாரம் இருந்தது. இங்கு ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து வந்த மெகஹர்பான் அலிசா கலீபா கலாபத் வலியுல்லாஹ் அவர்கள் குடிசையமைத்து வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர் மரணமானபின் இவரின் ஜனாஸா இவ்வளவில் அடக்கம் செய்யப்பட்டு, ஸியாரம் அமைக்கப்பட்டது. இதை வைத்து பராமரிக்க பக்கீர்மார்கள் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலினால் நியமிக்கப்பட்டனர். தற்போது இக்கட்டிடங்கள் யாவும் அழிந்து சில தென்னமரங்கள் மட்டும் காணப்படுகின்றன.‘‘
மேலும், ‘‘காரைதீவின் விவசாயப் பாரம்பரியம்‘‘ எனும் தலைப்பிலான தனது கட்டுரையில், விவசாயப் போதனாசிரியரான இரா. விஜயராகவன் என்பவர், 103 ஆம் பக்கத்திலே, ‘‘ அக்காலப்பகுதியிலே இவ்வாறு வண்டில் மாட்டின் மூலம் நெல்லை ஏற்றி வரும்போது தங்கி தேனீர் அருந்த காரைதீவு தைக்கா சந்தியிலே ஒரு பிரபலமான தேனீர் சாலையும் இருந்துள்ளது மூத்த விவசாயிகளின் ஞாபகத்தில் உள்ளது‘‘ என்று எழுதியுள்ளார்.
திட்டமிடப்பட்டு சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள மேற்படி காரைதீவு முச்சந்தியிலுள்ள இடமானது, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமானது என்பதை தமிழ் சகோதரர்களே ஏற்றுக்கொண்டுள்ள ஒருசில சான்றுகள் மட்டுமே இவை.

நன்றி:- Nagoor Ariff






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top