தமிழக முதல்வர் ஜெயலலிதா
சொத்துக்குவிப்பு
வழக்கின் தீர்ப்பு: 3 மணி வரை ஒத்திவைப்பு
தமிழக
முதல்வர் ஜெயலலிதா
மீதான சொத்துக்
குவிப்பு வழக்கின்
தீர்ப்பு 3 மணிக்கு வெளியாகும் என்று பரப்பன
அக்ரஹாரா நீதிமன்ற
வளாகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பரப்பன
அக்ரஹார பகுதியில்
கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பலர் வெளியேற்றப்
பட்டு வருகின்றனர்.
அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தீவிர பாதுகாப்பு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழக
முதல்வர் ஜெயலலிதா
மற்றும் இந்த
வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றம்
நீரூபிக்கப் பட்டுள்ளதாகவும், குற்றவாளி
என்று தீர்ப்பும்
தண்டனை 4 வருடங்கள்
என்றும் அந்தப் பகுதியில்
உறுதிசெய்யப்படாத தகவல்கள் கசிந்தன. இதனால் அந்தப்
பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,
முதலில் 11 மணிக்கு அளிக்கப் படுவதாக அறிவிக்கப்
பட்டிருந்த தீர்ப்பின் விவரம், பின்னர் 1 மணிக்கும்,
தற்போது 3 மணிக்கும்
ஒத்திவைக்கப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.