தேசிய ரீதியில்
புகழ் ஓங்கச்செய்த
கல்முனை ஸாஹிறா கிரிக்கெட் அணியினருக்கு
பாராளுமன்ற
உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பாராட்டு
பிறந்த
மண்ணையும், பாடசாலையின் பெயரையும் தேசிய ரீதியில்
புகழ் ஓங்கச்செய்த
கல்முனை ஸாஹிறாக்
கல்லூரி கிரிக்கெட்
அணியினரை பாராட்டுகின்றேன்.
அகில இலங்கை
கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்று சம்பியனானதையிட்டு
மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
இவ்வாறு
திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனை ஸாஹிறா கிரிக்கெட்
அணியினரைப் பாராட்டியிருக்கிறார்
ஸ்ரீலங்கா
கிரிக்கட் சபை
மற்றும் அகில
இலங்கை பாடசாலைக்
கிரிக்கட் சம்மேளனம்
ஆகியன இணைந்து
யாழ்ப்பாணத்தில் நடத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில்
17 வயதுக்குட்பட்ட மாணவர்களுகான கடினபந்து
கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில்
யாழ்பாணம் மத்திய
கல்லூரியை கல்முனை
ஸாஹிறாக் கல்லூரி
அணியினர் எதிர்கொண்டு
வெற்றிபெற்று இச்சுற்றுப்போட்டியின் அகில
இலங்கை சம்பியனாக
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த
வெற்றி மூலம் தேசிய ரீதியில் புகழ் ஓங்கச் செய்துள்ள
கல்முனை
ஸாஹிறா கிரிக்கெட்
அணியினருக்கு பாராட்டுத் தெரிவிக்குகையிலேயே பாராளுமன்ற
உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸாஹிறா
அணியினரின் வெற்றி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேலும் பாராட்டுகையில் மேலும்
தெரிவித்திருப்பதாவது:-
ஸாஹிறாக்
கல்லூரியின் வரலாற்றில் இதுவும் ஒரு மைல்கல்லாகும்.
இந்தப் பாடசாலையின்
பழைய மாணவர்
என்ற வகையிலும்,
இத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும்
இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றறேன்.
திறமைகளை
முழுமையாக வெளிக்காட்டி
வெற்றி பெற்று
பாடசாலையின் பெயரையும், பிறந்த மண்ணையும் தேசிய
ரீதியில் புகழடையச்
செய்த நமது
வீரர்களை பாராட்டுகின்றேன்.
அத்தோடு இந்த
வெற்றிகளுக்கு காரணமாக இருந்த பயிற்சியாளர்கள் மற்றும்
பாடசாலை அதிபர்,
ஆசிரியர் குழாம்,
பழைய மாணவர்
சங்கம், பாடசாலை
அபிவிருத்திச் சபை உள்ளிட்ட அனைவரையும் இச்சந்தர்ப்பத்தில்
பாராட்டுகின்றேன்.
கல்வித்துறையில்
பல துறைசார்ந்த
கல்விமான்களை உருவாக்கி கல்முனை மண்ணுக்கு பெருமை
சேர்த்துள்ள ஸாஹிறாக் கல்லூரி பல துறைகளிலும்
பல சாதனைகளை
படைக்க பிரார்த்திக்கின்றேன்
என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment