முஸ்லிம்கள் எம்மை
வெறுக்க வில்லை
நாம் இணைந்திருக்கும் அரசைத்தான் வெறுக்கிறார்கள்
- முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலி
முஸ்லிம்கள்
எம்மை வெறுக்க
வில்லை. நாம்
இணைந்திருக்கும் அரசைத்தான் வெறுக்கிறார்கள்
என்பது ஊவா
தேர்தல் முடிவின்
மூலம் விளங்குகிறது.இது அரசுக்கு
நல்லதல்ல என்று
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் கட்சியின்
செயலாளர் நாயகம்
எம்.ரி.ஹஸனலி எம்.பி. தெரிவித்துள்ளார். ஏற்கனவே
தமிழ் இனம்
அரசை விட்டு
தூரப்பட்டு நிற்கிறது. மற்றுமொரு முஸ்லிம் இனமும்
இப்போது அவ்வாறு
தூரமாகத் தொடங்கிவிட்டது
என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது
தொடர்பில் அவர்
மேலும் தெரிவித்ததாவது, ஊவா தேர்தலின் முடிவுகளின்படி,
முஸ்லிம்கள் அரசை விட்டு தொலை தூரம்
சென்றுவிட்டனர் என்றும் முஸ்லிம் தலைவர்கள் அரசுடன்
இருப்பது தொடர்பில்
மீள்பரிசீலனை செய்ய வைத்துவிட்டனர் ஊவா தேர்தலில் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸும்
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸும்
ஒன்றிணைந்து போட்டியிட்டும் கூட எம்மால் ஓர்
ஆசனத்தையேனும் பெறமுடியவில்லை. ஒரு தேசிய
அரசுக்கு அந்த
நாட்டில் வாழ்கின்ற
அனைத்து இன
மக்களும் ஓரினம்தான்.
ஆனால் அரசு,
தமிழ், முஸ்லிம்
மக்களை தள்ளிவைத்து
செயற்படுவது அரசின் செயற்பாட்டுக்கு ஆரோக்கியத்தை தராது. இந்த நாட்டின் இரண்டு
இனங்கள் தன்னில்
இருந்து தூரமாகும்.
இந்த அபாயகரமான
விடயம் தொடர்பில்
ஜனாதிபதி உடன்
கவனம் செலுத்தவேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் குழுக்களைத் தடைசெய்வதோடு
தமிழர் பிரச்சினைக்கான
அரசியல் தீர்வு
விடயத்திலும் அரசு உடன் கவனம் செலுத்தவேண்டும். அரசு தனது நிலைப்பாட்டை
மாற்றிக்கொள்ளாது மேலும் இனவாதக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு
இடம்கொடுத்தால், முஸ்லிம்கள், முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்தும்
அரசுடன் இருப்பது
தொடர்பில் மீள்பரிசீலனை
செய்யுமாறு எம்மிடம் கேட்கின்றனர். தேர்தல்
முடிவும் அதைத்தான்
சொல்லுகின்றன.முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என்ற
வகையில் மக்கள்
விருப்புக்கு ஏற்பவே நாம் செயற்பட வேண்டும்.
எமது சுய
விருப்பத்தின் அடிப்படையில் செயற்பட முடியாது.
ஆகவே, கடந்த மேல், தென் மற்றும்
ஊவா தேர்தல்களில்
முஸ்லிம்கள் விடுத்திருக்கும் செய்தியை ஜனாதிபதி கவனத்தில்
எடுத்து செயற்பட
வேண்டும்”இவ்வாறு
ஹஸனலி எம்.பி. தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment