என்னை விமர்சிப்பவர்களையும் அந்த விமர்சனங்களையும் ஆராய்ந்து பார்த்தபோது
அவர்களுக்கு ”பால் புட்டிகளை” வாங்கித் தரலாம் எனத் தோன்றுகின்றது.
இப்படிக் கூறுகின்றார் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்
தன்னை நிறுவும் தர்க்கமோ சொல்லாடல்களோ அற்ற ஒரு தனியன்,
மாறுபட்ட பார்வைகளுடன் முப்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் தளத்தில் இயங்குகிற செயல்பாட்டாளன்,
அறம்சார்ந்த அணுகுமுறை உடையவன்,
சமூக அரசியல் நோக்கில் நாட்டின் எதிர்காலம் குறித்த புரிதல் உடையவன்,
தனியான மனித நேயத்துடனான இயங்குதளமுடையவன்,
முஸ்லிமாக - போராளியாக - அரசியல்வாதியாக மானிடச்சிக்கல்களை எதிர்கொண்டவன்,
இன்னும் எதிர்கொள்கிறவன் ஆகிய எனது ஒட்டுமொத்த அடையாளங்களையும் தகர்த்தெறியும் வகையில் விமர்சிக்கப்படுகிறேன்.
இளைய சமுதாயத்தின் மீது நிறைய நம்பிக்கை கொண்டிருப்பவன் நான். துடிப்பான இளைஞனாக இருந்த என்னைத் திரும்பிப்பார்க்கிறபோது தெரிகிற நம்பிக்கை அது. கொஞ்சம்கூட சிந்தனையும், பகுத்தறிவும் இல்லாத, நுணுக்கமாக எதையும் அறிந்து கொள்ள முடியாத இளைஞர்களைக் காணுகிறபோது அவர்களின் எழுத்துக்களைப் படிக்கிறபோது வீணாய்ப்போகிற அவர்களின் ஒவ்வொரு கணத்துக்காகவும் வருந்தவேண்டியுள்ளது.
நேசமும் மரியாதையும் கொண்டிருக்கும் பலர் என்னைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து நான் பேசவேண்டும் என்று வேண்டியபடியிருக்கிறார்கள். இப்படி வேண்டுகிறவர்களும் இளைஞர்கள்தான். நேசத்துக்குரிய அந்த சிலருக்காவே இதனை எழுதுகிறேன். என்னுடைய பாதையில் - எனக்குரிய பாதையில் இருக்கிறேன் என்பதை சொற்களால் எழுதிவைக்கவோ, சொல்லிவைக்கவோ விரும்பவில்லை. நிரூபணப்படுத்தும் வாழ்வு.....
என்னை விமர்சிப்பவர்களையும் அந்த விமர்சனங்களையும் ஆராய்ந்து பார்த்தபோது ”பால் புட்டிகளை” அவர்களுக்கு வாங்கித் தரலாம் என்று தோன்றியது. இன்னும் அவர்கள் நெடுந்தூரம் பயணிக்கவேண்டியுள்ளதால்............
ஆகவே எனது சொற்களை வீணடிக்க விரும்பவில்லை நான்......
பஷீர் சேகுதாவூத்
0 comments:
Post a Comment