கார்க் கதவை மூடாததால்
விவாகரத்து!
சவூதியில்
சம்பவம்
கார்க்
கதவை மூட
மறுத்த காரணத்துக்காக
சவூதி அரேபியர்
ஒருவர் தனது
மனைவியை விவாகரத்து
செய்துள்ளார்.
இதுகுறித்து
அந்நாட்டிலிருந்து வெளிவரும் "அரபு
நியூஸ்' இதழில்
வெளியான தகவலில்
தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சவூதியில்
குழந்தைகளுடன் காரில் உல்லாசப் பயணம் சென்ற
தம்பதி ஒன்று,
தங்களது வீட்டுக்குத்
திரும்பியுள்ளது. அப்போது காரிலிருந்து இறங்கிய மனைவி,
தனது குழந்தைகளையும்
இறக்கிவிட்டு வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.
மனைவி கார்க்
கதவை மூடாமல்
சென்றதைக் கண்ட
கணவர், கோபமுடன்
அதனை மூடச்
சொல்லியிருக்கிறார். ஆனால், காருக்கு
அருகில் கணவர்
இருப்பதால் அவரையே மூடிவிடும்படி மனைவி சொல்லியிருக்கிறார்.
இதனால்
கோபம் தலைக்கேறிய
கணவர், மனைவியை
விவாகரத்து செய்வதாகக் கூறியிருக்கிறார்.
மனைவியும் தனது
தாய் வீட்டுக்குச்
சென்றுவிட்டார்.
உறவினர்கள்
அவரை திரும்ப
அழைத்தபோது, பொறுப்பில்லாத கணவனுடன் மீண்டும் சேர
விருப்பமில்லை என அவர் மறுத்துவிட்டதாக அந்தச்
செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment