“ விபுலாநந்த அடிகளும் முஸ்லிம்களும் “
நூல் வெளியீட்டு விழா (படங்கள்)
கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப்பணிப்பாளருமான ஏ. பீர் முகம்மது எழுதிய “ விபுலாநந்த அடிகளும் முஸ்லிம்களும் “ எனும் நூல் வெளியீட்டு விழா இன்று 20 ஆம்
திகதி சனிக்கிழமை பிற்பகல் கொழும்பு – 6, வெள்ளவத்தை, சங்கம் ஒழுங்கையிலுள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் (செயலாளர், முஸ்லிம் சமய, கலாசார அமைச்சு (ஓய்வுநிலை) ) தலைமை வகித்தார்.
வைத்திய கலாநிதி தாஸிம் அகமது வரவேற்புரையையும் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் தொடக்கவுரையையும் நிகழ்த்தினார்கள்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த் தொண்டாளர் புரவலர் ஹாஷிம் உமர்
முதல் பிரதியையும் அல்ஹாஜ் எம்.ஐ.எம். இஸ்மாயில் (Chartered Architect) சிறப்பு பிரதியையும் பெற்றுக் கொண்டார்கள். விழாவில் நூல்
ஆசிரியர் ஏ. பீர் முகம்மது ஏற்புரை நிகழ்த்தினார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், கொழும்புத் தமிழ் சங்கத்தின் தலைவர் இரகுபதி பாலசிறிதரன், ஓய்வு நிலை சுங்க அதிகாரி எஸ்.எச்.எம். அலி, மெளலவி முபாறக் அப்துல் மஜீத் ஆகியோர் உட்பட இன்னும் பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனா்.

நன்றி:- படங்கள்: அஸ்ரப் ஏ சமத்
0 comments:
Post a Comment