கொழும்பு தமிழ் சங்கத்தில் இன்று இடம்பெறும்

விபுலாநந்த அடிகளும் முஸ்லிம்களும் “  வெளியீட்டு விழா

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் முன்னைநாள் அதிபரும் ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப்பணிப்பாளருமான . பீர் முகம்மது எழுதிய       “ விபுலாநந்த அடிகளும் முஸ்லிம்களும்எனும்  நூல் வெளியீட்டு விழா இன்று 20 ஆம் திகதி சனிக்கிழமை  பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்பு – 6, வெள்ளவத்தை, சங்கம் ஒழுங்கையிலுள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்வுக்கு அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் (செயலாளர், முஸ்லிம் சமய, கலாசார அமைச்சு (ஓய்வுநிலை) ) தலைமை வகிப்பார்.
வைத்திய கலாநிதி தாஸிம் அகமது வரவேற்புரையையும் மணிப்புலவர் மருதூர் . மஜீத் தொடக்கவுரையையும் நிகழ்த்துவார்கள்.
கொழும்புத் தமிழ் சங்கத்தின் தலைவர் இரகுபதி பாலசிறிதரன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழியியற்றுறை தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்பு சிவசுப்ரமணியம், ஓய்வு நிலை சுங்க அதிகாரி எஸ்.எச்.எம். அலி ஆகியோர்  இந்நிகழ்வில் சிறப்புரைகள் நிகழ்த்துவார்கள்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த் தொண்டாளர் புரவலர் ஹாஷிம் உமர் முதல் பிரதியையும் அல்ஹாஜ் எம்..எம். இஸ்மாயில் (Chartered Architect) சிறப்பு பிரதியையும் பெற்றுக் கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விழாவில் நூல் ஆசிரியர் . பீர் முகம்மது ஏற்புரை நிகழ்த்துவார்.

கடந்த 22.06.2014 அன்று நடைபெறவிருந்த இந்நிகழ்வு தவிர்க்கமுடியாத காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top