சிறுமியை
'உயிருடன் புதைத்து' கொலை செய்த சித்தி!
ஆக்ராவில் சம்பவம்
ஆக்ராவில்
சிறுமியை 'உயிருடன்
புதைத்து' கொலை
செய்த அவரது சித்தி கைது
செய்யப்பட்டுள்ளார்.
ஹரிபூர்
பொலிஸ் நிலையத்திற்கு
உட்பட்ட சாஸ்திரிபுரம்
பகுதியை சேர்ந்த
சிறுமி சுமிக்ஷா. அவரது
சித்தி அர்சனா.
சிறுமி சுமிக்ஷா கடந்த
ஞாயிற்றுக் கிழமையில் இருந்து காணவில்லை. அர்சனாவும்
சுமிக்ஷாவை
காணவில்லை என்று
தனது கணவரிடம்
தெரித்துள்ளார். ஆனால் சிறுமியை ஞாயிறு அன்று
உயிருடன் மண்ணுக்குள்
குழி தொண்டி
புதைத்துள்ளார். சிறுமியின் வாயில் துணியை வைத்து
அவரது சத்தம்
வெளியே கேட்டகாத
வண்ணம் கொடுமை
செய்து கொலை
செய்துள்ளார். பின்னர் அர்சனா இந்த விவகாரத்தை
தனது உறவினரிடம்
தெரிவித்துள்ளார். அவர் இதனை
பொலிஸாடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக
பொலிஸார் சம்பவ
இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டனர்.
சிறுமி இறந்துவிட்டார்.
அவருடைய வாயில்
இருந்து துணி
கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக
அர்சனாவை பொலிஸார்
கைது செய்துள்ளனர்.
அவர் மீது
கொலை வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி கொடூரமாக
கொலை செய்யப்பட்ட
சம்பவம் அங்கு
பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடலை
பார்த்த கிராமத்தினர்
கண்ணீர் விட்டு
அழுதனர். இது
தொடர்பாக பொலிஸார்
விசாரித்து வருகின்றனர். சிறுமி கொலை செய்யப்பட்டதற்கான
காரணம் தெரியவரவில்லை.
பொலிஸார் தொடர்ந்து
விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.