மூன்று சகாப்த
அரசியல் கற்று தந்த பாடங்கள்!!
Maryam
Naleemudeen
தொடரும் நினைவலைகள் ..................
தொடர் - 3
மருத்துவ பீடம் நுழைந்த
M.S. காரியப்பர் டாக்டரானாரா.............?
அமெரிக்க
ஜனாதிபதி John F. Kennedy 1960 களில் அமெரிக்காவின்
ஆர்கேன்சுஸ் மாநிலத்தில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த
போது, அங்கிருந்த
கல்லூரி ஒன்றுக்கு
விஜயம் செய்து
மாணவர்களுடன் அளவளாவிய போது பொதுவாக எல்லா
தலைவர்களும் கேட்பது போல், அங்கிருந்த மாணவர்களிடம்
அவர்களது எதிர்கால
லட்சியம் என்ன
என்று கேட்டார்.
மாணவர்கள் வழமை
போல டாக்டராக,
சட்டத்தரணியாக............. என்றெல்லாம் பதில்
அளித்த வேலையில்,
ஒரு பதிமூன்று
வயது சிறுவன்
எழுந்து நின்று
நாளை நான்
அமெரிக்காவின் ஜனாதிபதியாக வருவேன் என மிடுக்காக
பதில் அளித்தான்.
John F.Kennedy மலைத்து நின்றார். ஆனால்
அந்த சிறுவன்
வளர்ந்து தனது
42 வது வயதில்
அமெரிக்காவின் அரசியல் சகாப்தத்தில் அதி இளம்
ஜனாதிபதியாக 1992இல் பதவியேற்றார். அந்த மிடுக்கான
சிறுவன் தான்
அமெரிக்காவின் அரசியல் சரித்திரத்தில் இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும்
சமாதான ஒப்பந்தம்
செய்து மத்திய
கிழக்கை யுத்தமற்ற
பூமியாக மாற்றிய
அமெரிக்காவின் 42வது ஜனாதிபதி Bill Clinton!
தீயவர்கள்
பிறப்பதில்லை; சமூக சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உருவாக்கப்படுகிறார்கள்.
ஆனால் தலைவர்கள்
உருவாக்கப்படுவதில்லை; அவர்கள் காருண்ய
சிந்தனையும், திறமையும், விடா முயற்சியும் கொண்டவர்களாக
பிறக்கிறார்கள்.
மருத்துவக்
கல்லூரி படிப்பு
காரியப்பருக்கு ஏனோ இனிக்கவில்லை. அவர் மனம்
அடிக்கடி அவரை
கேட்டுக் கொண்டது.
நான் ஒரு
டாக்டராகி செய்யப்
போகும் சேவையை
விட பல
மடங்கு தேவை
எனது சமூகத்துக்கு
இருக்கிறது. கல்முனை தொடங்கி கண்டி வரை
காடாக கிடக்கும்
தரிசு நிலத்தை
வழங் கொழிக்கும்
விவசாய பூமியாக
எப்படி மாற்றுவது.
கல்வி மறுக்கப்பட்ட
எனது சமூகத்தின்
கல்விக் கண்களை
எவ்வாறு திறப்பது,
அடுக்களையில் அடிமைகளாக கிடக்கும் முஸ்லிம் பெண்களுக்கு
கல்விச் சிந்தனை
அளித்து சுதந்திர
பெண்களாக எவ்வாறு
மாற்றுவது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக சுதந்திர
போராட்டம் ஆரம்பித்து
இருத்த அந்த
கால கட்டத்தில்
ஐக்கிய இலங்கையில்
முஸ்லிம்களை இலங்கையர் என்ற ஒரே கொடியின்
கீழ் எவ்வாறு
ஒற்றுமை பட
வைப்பது .............. இவைகளே அவரது
சிந்தனையில் மேலோங்கி நின்றது.
தனது
ஆதங்கத்தை மருத்துவர்களான
தனது தந்தையிடமும்
சகோதர்களிடமும் வெளியிட்டு அவர்களது ஆலோசனைப்படி மருத்துவப்
படிப்பை நிறுத்தி
விட்டு தனது
20வது வயதில்
அப்போதைய அரச
அதிபர் C.B. Brian என்பவரின் அழைப்பை
ஏற்று 01.01.1921 இல் பாணமபற்று "மகாபிட்டி' வன்னியனாராக
பதவி ஏற்றார்.
இவர்
வன்னியனாராக கடமை ஆற்றிய காலத்தில் எமது
பிரதேசத்தின் விவசாய, பொருளாதார, கல்வித் துறைகளுக்கு
இவர் ஆற்றிய
சேவை அளப்பரியது.
இவரது
திறமையை உணர்ந்த
ஆங்கில கவனர்கள்
1927 ம் ஆண்டு
சம்மாந்துறை வன்னியனாராகவும், 1932 இல் கரைவாகு,நிந்தவூர்ப்பற்று
வன்னியனாராகவும் இவரை நியமித்து சுமார் 25 வருட
காலம் வன்னியனாராக
கடமை ஆற்றினார்
.
மேலும்
இவரது பொறுப்புணர்வு,
சமூக சிந்தனையுடன்
இவர் ஆற்றிய
சேவை, அரசாங்கத்துடன்
கொண்டிருந்த விசுவாசம், “கேட் முதலியார்” என்ற
பட்டதை 1944 இல் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் இவருக்கு
அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட காரணமாக அமைந்தது. “கேட்
முதலியார்” என்ற இக் கௌரவ பட்டதைப்
பெற்ற முதல்
இலங்கை முஸ்லிம்
இவரே என்பது
பெருமைக்குரிய ஒரு சான்றாகும்.
இவர்
வன்னிமையாக இருந்த காலத்தில் இவரது முயற்சியினால்
எம் பிரதேசத்தில்
உருவாக்கப்பட்ட பாடசாலைகள்:
சாய்ந்தமருது
அரசினர் தமிழ்
பெண்கள் பாடசாலை
- 1928 (தற்போதைய GMMS)
கல்முனைக்குடி
அரசினர் முஸ்லிம்
தமிழ் பெண்கள்
பாடசாலை - 1930 (அல் அஷ்ஹர்)
கல்முனைக்குடி
அரசினர் தமிழ்
பெண்கள் பாடசாலை
- 1936 (அல் சுஹரா வித்தியாலயம் )
மருதமுனை
தமிழ் பெண்கள்
பாடசாலை - 1940 (அல் ஹம்ரா வித்தியாலயம்)
நீலாவணை
தமிழ் பெண்கள்
பாடசாலை -1940 (விஷ்ணு வித்தியாலயம்)
மாவடிப்பள்ளி
அரசினர் தமிழ்
பெண்கள் பாடசாலை
-1948 (அல் அஷ்ரொப் மகாவித்தியாலயம்)
மாணவர்களின்
கல்வியோடு மட்டும்
அவரது சேவை
நின்று விட
வில்லை. 1940 களில் தமிழ் மொழி மூல
ஆசிரிய பயிற்ச்சி
கல்லூரிகள் மட்டக்களப்பிலும் கோப்பாயிலும்
மட்டுமே அமைந்து
இருந்தன. முஸ்லிம்
ஆசிரியர்கள் அங்கு பயிற்ச்சி பெறுவதில் உள்ள
சிரமங்களையும் தனிமைப் படுத்தப்பட்ட சிக்கல்களையும் உணர்ந்த
காரியப்பர் அவர்கள் Sir Razick Fareed உடன்
இணைந்து 1941 இல் Attalachenai யிலும்
Aluthgama இலும் இரண்டு முஸ்லிம் ஆசிரிய பயிற்ச்சிக்
கலாசாலைகளை நிறுவினார். இது முஸ்லிம் ஆசிரியர்களின்
கல்வி வரலாற்றில்
ஒரு மைல்
கல் என்றால்
மிகையாகாது.
மகாபிட்டி
வன்னியனார் என்று இவரது பதவி இவருக்கு
கொடுத்த பட்டதை
விட, இவரது
முப்பாட்டனாருக்கு ஸ்ரீ விக்கிரமராஜசிங்க
மன்னனால் கௌரவிக்கப்பட்டு
வழங்கப்பட்ட அந்த வாளை இவர் தன்
இடையிலும், துருக்கித் தொப்பியை தன் தலையிலும்,
வன்னிமைக்கான அரச உடையும் அணிந்து பவனி
வரும் இவரது
மிடுக்கான தோற்றமும்,
லாவகமாக குதிரையில்
வலம் வந்து
தனது ஆளுமைக்குட்பட்ட
பிரதேசங்களை கண்காணிக்கும் இவரது ஆற்றலும் , வெள்ளைக்கார
துரைமார்கலுடன் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறமையும்,
எல்லாவற்றுக்கும் மேலாக வெள்ளை வெளேர் என்ற
இவரது வண்ணமும்
அக்கால பெண்களுக்கு
இடையே இவரை
ஒரு கதாநாயகனாக
காட்டி, அக்கால
பெண்கள் மகாபிட்டி
என்பதை விட்டு
"மாப்பொட்டி" வன்னியனார் என்று
இவரை அழைக்க
ஆரம்பித்தனர்.
வரலாறு
தலைவர்களின் முன்னேற்றத்தில் அவர்களது குடும்பத்தின் பங்களிப்பு
மிக முக்கியமானது
என்று எடுத்துச்
சொல்கிறது, தான் கைப்பிடித்தவனை எம் சமூக
கட்டுப்பாட்டில் எல்லாப் பெண்களும் அனுசரித்தே போகிறார்கள்.
ஆனால் ஒரு
பெண் அதிலும்
முன்னோடியாவது தன் கணவரை நேசிப்பது போல்
அவரது லட்சியங்களை
, அவரது எண்ணங்களை
அனுசரித்து அவற்றை ஆதரித்து அதற்கு ஏற்றாபோல்
தன் வாழ்க்கையையும்
அமைத்துக் கொள்வதே.
ஒன்று இரண்டல்ல
இதற்கு ஆயிரம்
ஆதாரங்கள் ஊண்டு.
காந்திஜீக்கு ஒரு கஸ்தூரி பாய், நேருஜீக்கு
ஒரு கமலா,அதே போல்
காரியப்பருக்கு ஒரு கதீஜா.1928 இல் காரியப்பரின்
27 வது வயதில்
திருமண பந்தத்தில்
இணைந்து கொண்டார்.
கதீஜா அவர்கள்
சாதாரண குடும்பத்தை
சேர்ந்தவர் அல்ல. அந்தக் காலத்தில் காரியப்ப்ருக்கு
இணையாக செல்வமும்
செல்வாக்கும் பெற்று விளங்கிய முஹம்மது காசிம்
போடியாரின் மூத்த மகளாவார். இவர்களது திருமண
வாழ்வில் மூன்று
ஆண்களும் எட்டுப்
பெண்களும் வாரிசுகளாக
கிடைத்தனர்.
கஸ்தூரி
பாய்யோடு எனது
உம்மம்மா கதீஜாவை
ஒப்பிடுகின்ற போது சிலர் நான் மிகைப்படுத்துவதாக
நினைக்கலாம். காந்திஜி இன் வரலாற்றைப் படித்தவர்களுக்கு
தெரியும் தன்
வீட்டுக்குள்ளேயே தன் வாழ்கையை அமைத்துக் கொண்டவர்
கஸ்தூரி பாய்.
அதே போன்று
எனது உம்மம்மாவும்
வீட்டுக்குள் அந்த நான்கு சுவர்களுக்குள் தன்
வாழ்கையை அமைத்துக்
கொண்டவர். ஒரு
பெரும் தனவந்தரின்
மகள்,ஒரு
பெரும் அரசியல்
பிரமுகரின் மனைவி என்ற எந்த பந்தாவும்
இல்லாமல், கணவருக்கு
பணிவிடை செய்வதும்,
குழந்தைகளை பராமரிப்பதும், கணவரின் ஆதரவாளர்களுக்கு ஆக்கிப்
போடுவதும் என்றே
அவரது நாட்கள்
கழிந்தன. சொன்னால்
நம்ப மாட்டீர்கள்
எனது பாட்டனாரின்
50 வருட பொது
வாழ்கையில் எனது உம்மம்மா ஒரு மேடை
கண்டதும் இல்லை,
விழாக் கொண்டதும்
இல்லை, ஊர்வலம்
சென்றதும் இல்லை.
அவர் ஒரு
பொறுமையின் இலக்கணம். கணவரின் வெற்றியே தன்
வாழ்க்கை என
கொண்ட ஒரு
லட்சியம்.
1947 இல் சோல்பரி ஆணைக்குழு இலங்கையில்
முதலாவது ஜனநாயக
தேர்தலை நடத்த
முன் வந்தது.
அப்போது ஐக்கிய
தேசியக் கட்சியின்
தலைவராக இருந்த
D.S.Senanayake அவர்கள் கரைவாகு வன்னிமையாக
இருந்த காரியப்பர்
அவர்களைப் பற்றி
நன்கு அறிந்திருந்தார்.
வன்னியராக மட்டுமல்லாமல்;
மட்டக்களப்பு
மாவட்ட குற்றவியல்
மரண விசாரணை
அதிகாரி (1921)
இலங்கை
வனப் பாதுகாப்பு
சபை உறுப்பினர்
(1923)
சமாதான
நீதவான் (1931)
உத்தியோகப்
பற்றற்ற நீதவான்
(1939)
மட்டக்களப்பு
மாவட்ட கல்விக்
குழு அங்கத்தவர்
(1940)
கல்முனை
கூட்டுறவு சங்கத்
தலைவர் (1942)
மத்திய
விவசாய சபையின்
மட்டக்களப்பு மாகாண பிரதிநிதி (1942) போன்ற பல
பதவிகளை வகித்திருந்த
காரியப்பர் அவர்களை கல்முனை, சாய்ந்தமருது, மாவடிப்பள்ளி,
சம்மாந்துறை, காரைதீவு, இறக்காமம், வரிப்பத்தான்சேனை, அம்பாறை, தமன்னை ,உஹன்னை ஆகிய
பிரதேசங்களை உள்ளடக்கிய கல்முனை தொகுதியின் ஐக்கிய
தேசிய கட்சின்
வேட்பாளராக நியமிப்பதெனெ D.S. Senanayake முடிவெடுத்தார்.
ஐக்கிய இலங்கையின்
முதலாவது பாராளமன்ற
தேர்தலில் 1947 இல் கல்முனையில் போட்டியிட்ட காரியப்பர்
வெற்றி பெற்றாரா???
தொடரும்...............................
0 comments:
Post a Comment