பெங்களூரு சிறப்பு நீதிமன்ற
தீர்ப்பை எதிர்த்து
ஜெயலலிதா சார்பில்
மேல்முறையீடு
பெங்களூரு
சிறப்பு நீதிமன்றம்
வழங்கிய தீர்ப்பை
எதிர்த்து தமிழக
முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா சார்பில்
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு
மனுவில், பெங்களூரு
சிறப்பு நீதிமன்ற
நீதிபதி மைக்கேல்
டி குன்ஹா
வழங்கிய தீர்ப்பை
நிறுத்தி வைக்க
வேண்டும் என்றும்,
தீர்ப்பை ரத்து
செய்ய வேண்டும்
என்றும் கூறப்பட்டுள்ளது.
சொத்து
குவிப்பு வழக்கில்
4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா,
சசிகலா, இளவரசி,
சுதாகரன் உட்பட
4 பேரின் தண்டனையை
நிறுத்தி வைத்து,
ஜாமீன் வழங்கக்
கோரியும் தனித்தனியாக
மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டுள்ளன.
ஜெயலலிதா
உட்பட 4 பேரின்
சார்பாக ஜாமீன்
மனுக்கள், தீர்ப்பின்
நகலுடன் கர்நாடக
உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக் கால
நீதிமன்ற அமர்வு
முன்பு திங்கட்கிழமை
காலை தாக்கல்
செய்யப்பட்டன.
ராம்ஜெத்
மலானி ஆஜராகிறார்:
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் ஆஜராகிறார் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி. இதற்காக லண்டனில் இருந்து அவர் தாயகம் திரும்புகிறார். திங்கள்கிழமை அவர் இந்தியா வந்தடைகிறார்.
ஜெயலலிதாவை சந்திக்கிறார் ராம்ஜெத் மலானி:
ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், லண்டனில் இருந்து திரும்பும் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி, ஜெயலலிதாவை அவர் அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு:
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா அறிவித்தார்.
அவர் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் சசிகலா, சுதாகரன்,இளவரசிக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 10 கோடி அபராதமும் விதித்தார். இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment