கல்முனை பிச்சிப்
பிலாவடி வீதி
டாக்டர். றிஸ்வி வீதியாக
மாற்றம்
வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு
கல்முனை
பிச்சிப் பிலாவடி
வீதியின் பெயர்,
டாக்டர் றிஸ்வி
வீதி என
பெயர் மாற்றம்
செய்யப்பட்டு, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு
மாகாண முதலமைச்சர்
நஜீப் அப்துல்
மஜீத் 2014.08.13 ஆம் திகதி கையொப்பமிட்டு, 2014.08.29ஆம் திகதி
வர்த்தமானியில் இவ்விடயம் பிரசுரமாகியுள்ளது.
கடந்த
சில வருடங்களுக்கு
முன்னர் அவ்வீதியில்
வசிக்கின்ற பொது மக்களினதும் அமைப்புகளினதும் கோரிக்கையின்
பேரில் இப்பெயர்
மாற்றம் தொடர்பில்
கல்முனை மாநகர
சபையில் மாநகர
சபை உறுப்பினர்
அபூபக்கர் முஹம்மத் றியாஸினால் பிரேரணை ஒன்று
சமர்ப்பிக்கப்பட்டு- அதற்கான அங்கீகாரம்
பெறப்பட்டிருந்தது.
கல்முனை
பிராந்தியத்தில் பொது மக்கள் நலனில் மிகவும்
கரிசனையுடன் வைத்தியத்துறைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து
சேவையாற்றிய மர்ஹூம் டாக்டர் ஏ.எம்.றிஸ்வி, சாய்ந்தமருது
மாவட்ட வைத்தியசாலையின்
பொறுப்பதிகாரியாக நீண்ட காலம் கடமையாற்றி அப்பகுதி
மக்களின் மனங்களில்
நீங்கா இடம்பிடித்திருந்தார்.
2004 டிசம்பர் 26ஆம் திகதி சுனாமி
அனர்த்தத்தின் போது டாக்டர் றிஸ்வி உயிரிழந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment