ஜனாதிபதிக்கு விளக்கமளித்தது
சர்வதேசப்
புரிந்துணர்விற்கான வணிகச் சபை
சர்வதேசப்
புரிந்துணர்விற்கான வணிகச் சபை
(Business Council for International Understanding - BCIU) ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவிற்கான
விளக்கமளிக்கும் நிகழ்வொன்றை நியூயோர்க் நகரில் நடாத்தியது.
இந்த
நிகழ்வு இரண்டு
பிரதான நோக்கங்களுக்காக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையில் ஏற்கனவே முதலிட்டுள்ள அல்லது நாட்டிலுள்ள
முதலீட்டு வாய்ப்புக்களை
ஆராய்வதற்கான ஆர்வத்தைக் கொண்டுள்ள பெரிய ஐக்கிய
அமெரிக்க நிறுவனங்களின்
பிரதிநிதிகளை ஒன்றுசேர்ப்பது முதலாவதாகும்.
தங்கள் நிறுவனங்களின்
ஆர்வங்கள் குறித்து
ஜனாதிபதிக்கு விளக்கமளிப்பதற்கானதும், வாய்ப்பு
அவர்களுக்கு வழங்கப்பட்டதோடு, இலங்கையின்
வணிக நடவடிக்கைகளின்
ஈடுபடுவது தொடர்பாக
பல்வகையான விடயங்கள்
குறித்து ஜனாதிபதியுடனும்,
ஏனைய உயர்நிலை
இலங்கை அதிகாரிகளுடனும்
கலந்துரையாடல்களை நடாத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டாவதாக,
இலங்கையில் காணப்படும் வாய்ப்புக்கள், ஆதாயங்கள் தொடர்பாக
இச்சந்திப்பில் தனியார் துறை குழுக்களிடம் இலங்கை
அதிகாரிகள் விளக்கமளிக்க வாய்ப்புக் கிடைத்தது.
இலங்கைவரும்
நிறுவனங்களுக்கு நாட்டிலுள்ள "சமாதானமும்,
நிலையான தன்மையும்"
சிறந்த ஆதாயமாகக்
காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உயர்
திறனுடைய ஊழியர்படையையும்
இலங்கை வழங்கக்கூடியதாக
உள்ளதாக மேலும்
குறிப்பிட்டார்.
சேவைகள்,
சுகாதாரப் பராமரிப்பு,
சுற்றுலாத்துறை ஆகியன புதிய முதலீட்டாளர்களுக்கு மிக அதிக வாய்ப்புக்களை வழங்கக்கூடியனவாக
உள்ளனவாக சிறப்பித்துக்
கூறப்பட்ட துறைகளில்
சிலவாகும்.
போயிங்
(Boeing), சிற்றிகுறூப் (Citigroup), எக்ஸொன் மோபில்
(Exxon Mobil) போன்றன உட்பட ஐக்கிய
அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த
நிகழ்வில் கலந்துகொண்டதோடு,
அவர்களின் பலர்
இலங்கைச் சந்தையில்
நுழைவதற்கான விருப்பை வெளிப்படுத்தினர்.
1955ம் ஆண்டு ஐ.அமெரிக்க
ஜனாதிபதி ட்வைச்
டி ஐசென்ஹவர்
(Dwight D. Eisenhower) இன் கீழ் வெள்ளை
மாளிகையின் முன்னெடுப்பாக ஆரம்பிக்கப்பட்ட
சர்வதேசப் புரிந்துணர்விற்கான
வணிகச் சபையானது
ஒரு
சர்வதேச வணிக அமைப்பாகும். உலகின் முன்னணி
வணிக மற்றும்
அரசியல் தலைவர்களுக்கான
பேச்சுவார்த்தை, கூட்டு ஆகியவற்றிற்கான சார்பற்ற வழிகாட்டியாக
வர்த்தகத்தையும், இராஜதந்திரத்தையும் இந்த அமைப்பு ஊக்குவிக்கிறது.
வெளிவிவகார
அமைச்சர் பேராசிரியர்
ஜி.எல்.
பீரிஸ், பாராளுமன்ற
உறுப்பினர்களான ஜனாப். ஏ.எச்.எம். அஸ்வர்,
திரு. ஜே.ஆர்.பி.
சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித்
வீரதுங்க, ஐக்கிய
நாடுகளின் இலங்கைக்கான
நிரந்தரப் பிரதிநிதி
கலாநிதி. பாலித
கோஹன, ஐக்கிய
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் திரு. பிரசாத்
காரியவசம், பிரதி நிரந்தரப் பிரதிநிதி மேஜர்.
ஜெனரல். ஷவேந்திர
சில்வா ஆகியோரும்
இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment