"முஸ்லிம் சமூகத்தினரை எனது சொந்தச் சகோதரர்கள் போல பாதுகாப்பேன்,"

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகத்திடம் 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவிப்பு


இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (Organization of Islamic Cooperation - OIC) செயலாளர் நாயகம் ஐயாட் அமீன் மடானி (Iyad Ameen Madani) நியூயோர்க் நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தார். இவ்வாரம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அமர்வுகளுக்கு ஓரமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் பதவிக்கு மடானி தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து, அமைப்புக்குட்பட்ட நாடுகளுக்கிடையில் அதிகரித்த இணைந்த உழைப்பிற்கும், ஒத்துழைப்புக்கும் இலங்கை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ராஜபக் தெரிவித்தார். செயலாளர் நாயகமாக ஜனவரி 2014 இல் மடானி பதவியேற்றிருந்தார்.
"இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு வெளியேயிருக்கும் நாடாக நாங்கள் இலங்கையைக் கருதவில்லை," என ஜனாதிபதி ராஜபக்ஷவிடம். மடானி தெரிவித்தார். "இலங்கையை நாங்கள் அமைப்பிற்கு உள்ளேயிருப்பதாகக் கருதுகிறோம்."
ஜனாதிபதி எடுத்துள்ள "முன்னோடிப் படிகளை" இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு பாராட்டுவதாக வெளிப்படுத்திய. மடானி, அமைப்பானது இலங்கை பற்றி "தொடர்ச்சியான உயர்மதிப்பைக்" கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே இலங்கையின் உறவுகளை மேம்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
அண்மைய காலத்தில் இடம்பெற்ற, சமயங்களால் உந்தப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட சில சம்பவங்களைப் பற்றிக் கலந்துரையாடும்போது, முஸ்லிம் சமூகத்திற்கெதிரான ஏதாவது சம்பவங்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமென மடானியிடம் ஜனாதிபதி ராஜபக் உறுதியளித்தார்.
"முஸ்லிம் சமூகத்தினரை எனது சொந்தச் சகோதரர்கள் போல பாதுகாப்பேன்," என ஜனாதிபதி ராஜபக் தெரிவித்தார்.
நாட்டின் கள நிலைவரங்களையும், எவ்வாறு பல பல்வகையான சமூகங்கள் சமாதானமாக இணைந்து காணப்படுகின்றன என்பதைப் பார்வையிடுவதற்கும் மடானியையும், ஏனைய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர்களையும் இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
சவூதி அரேபியாவிற்கு இன்னொரு தடவை வருகை தருமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவை. மடானி அழைப்பு விடுத்தார்.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இலங்கையானது 14 இராஜதந்திர தூதுவராலயங்களைக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளுடன் கொண்டுள்ள மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பிற்கு அரசாங்கம் வழங்கும் முக்கியத்துவத்தை இது சுட்டிக்காட்டுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top