வாக்காளர்
இடாப்பில் நீங்கள் இடம்பெற்றுள்ளீர்களா?
இணையத்தில் பரிசோதித்துப்
பார்க்க முடியும்
2014ஆம்
ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை
www.slelections.gov.lk என்ற இணையத்தள
முகவரியில் பார்வையிடலாம் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர்
30ஆம் திகதி வரை குறித்த இணையத்தள முகவரிக்குச் சென்று தனது மாவட்டம் மற்றும் தேசிய
அடையாள அட்டை இலக்கத்தை கொடுத்து தனது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்ளதாக என உறுதி
செய்து கொள்ள முடியும்.
வாக்காளர்
இடாப்பில் பெயர் இல்லாத நபர்கள் செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது கிராம சேவகர்
ஊடாக விண்ணப்பப்படிவம் ஒன்றை பெற்று மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்புவதன் மூலம்
வாக்காளர் இடாப்பில் சேர்த்துக்கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை 2014 ஆம்
ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பிரதேச கிராம சேவகர் அலுவலகத்தில், பிரதேச செயலாளர் அலுவலகத்தில்,
உள்ளூராட்சி சபை அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment