231 கிலோ ஹெரோயினுடன்
இருவர் பேருவளையில் கைது
ரூபா 277.8 கோடி பெறுமதி என மதிப்பீடு
பொலிஸ்
போதைப் தடுப்புப்
பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட
சுற்றிவளைப்பில் சுமார் 231 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர்
கைது செய்யப்பட்டனர்.
பேருவளை
- பலபிட்டிய பிரதேசத்துக்கிடையில் கடலில்
படகொன்றில் வைத்து குறித்த ஹெரோயினை கடத்திச்
சென்ற நிலையில்
அவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் பொலிஸ்
அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கைது
செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பேருவளையைச்
சேர்ந்த 28 மற்றும் 34 வயதுடையவர்கள் என அடையாளம்
காணப்படுள்ளனர்.
குறித்த
போதைப்பொருளின் பெறுமதி ரூபா 2,778 மில்லியனுக்கும் (ரூ. 277.8 கோடி) அதிகம் என
கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்போதைப்
பொருள் சுற்றிவளைப்பில்
கிடைக்கப்பெற்ற போதைப் பொருளின் அளவு பொலிஸ்
போதை தடுப்பு
பிரிவினர் மேற்கொண்ட
சுற்றிவளைப்பில் கிடைக்கப்பெற்ற இரண்டாவது மிகப் பெரிய
தொகையாகும். 2013 ஆம் ஆண்டு சுங்க திணைக்களத்துடன்
இணைந்து மேற்கொள்ளப்பட்ட
சுற்றிவளைப்பில் 260 கிலோ கிராமிற்கு
அதிக போதைப்பொருளை
பொலிஸ் போதை
பொருள் தடுப்பு
பிரிவினர் கைப்பற்றியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
பொலிஸ்
போதை பொருள்
தடுப்பு பிரிவினர்
மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment