நாடாளுமன்ற கலைப்பு
திங்களன்றே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு?
நாடாளுமன்றத்தைக்
கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன வெளியிட்ட
வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்ட
அடிப்படை உரிமை
மனுக்கள் மீதான
தீர்ப்பு இன்று
அறிவிக்கப்படமாட்டாது என்று தகவல்கள்
தெரிவிக்கி்ன்றன.
இந்த
மனுக்கள் தொடர்பான
விசாரணை இன்று
நான்காவது நாளாக
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக,
இந்த மனுக்கள்
மீது மூன்று
நாட்கள் விசாரணை
நடத்தப்படும் என்றே அறிவிக்கப்பட்டது. அதனால், இன்று
7ஆம் திகதி வரை வர்த்தமானி அறிவிப்புக்கு
இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும்,
நேற்றைய மூன்றாவது
நாள் விசாரணையின்
முடிவில், இன்றும்
விசாரணை தொடரும்
என்று அறிவித்திருந்த
உச்சநீதிமன்றத்தின் 7 நீதியரசர்களைக் கொண்ட
குழாம், இந்த
இடைக்காலத் தடை உத்தரவை நாளை 8 ஆம் திகதி
வரை நீடித்திருந்தது.
இந்த
நிலையில் இன்று
நான்காவது நாளாகவும்
விசாரணைகளை முன்னெடுத்து வரும், உச்சநீதிமன்றம், நாடாளுமன்றத்தை
கலைத்து, ஜனாதிபதியினால்
விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை
உத்தரவு பிறப்பித்து
உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு, எதிர்வரும் 10 ஆம்
திகதி வரை
நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த
வழக்கை விசாரித்துவரும்,
ஏழு நீதியசர்கள்
கொண்ட குழாமினால்,
இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால்
இந்த மனுக்கள்
தொடர்பான இறுதித்
தீர்ப்பு வரும்
திங்கட்கிழமையே அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை,
மதிய இடைவேளைக்குப்
பின்னரும், உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழாம் விசாரணைகளை
நடத்தி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment