அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி
ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ் 94 வயதில் காலமானார்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 94.  முன்னாள் ஜனாதிபதி ஜூனியர் புஷ்ஷுன் தந்தை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

94வயது வரை உயிரோடு இருந்த முதல் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவின் 41-வது  ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜார்ஜ் எச்டபிள்யு. புஷ் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை  அந்த பதவியில் இருந்தார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் காலத்தில் இருமுறை துணை ஜனாதிபதியாகவும் ஜார்ஜ் எச்.டபிள்யு புஷ் இருந்தார்.

கடந்த 1992-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பில் கிளிண்டனிடம் தோல்வி அடைந்தார் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜார்ஜ் எச். டபிள்யு புஷ். அதே பில் கிளிண்டனுக்கு பிறகு ஜனாதிபதி பதவிக்கு வந்தார் அவரது மகன் ஜூனியர் புஷ். இவரின் பதவிக்காலத்தில்தான் அமெரிக்க இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது.

ஜார்ஜ் எச் டபிள்யு புஷ்  மரணம் குறித்து அவரின் குடும்பத்தினர் ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், “ எங்களின் தந்தை எச்.டபிள்யு. புஷ் தனது 94வயது காலமானார் என்பதை, ஜெப், நீல், மார்வின், டோரோ மற்றும் நான் வருத்தத்துடன் தெரிவிக்கிறோம் மிகச்சிறந்த குணநலன்களுடன் வாழ்ந்தவர்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ் டபிள்யு புஷ் மனைவி பார்பாரா பியர்ஸ் புஷ் அவரின் 92-வது வயதில் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். அதன்பின் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜார்ஜ் புஷ் நேற்று நள்ளிரவு காலமானார். ஜார்ஜ் புஷ்ஷுக்கு 5 பிள்ளைகளும், 17 பேரன்களும் உள்ளனர்.

கடந்த 1924-ம் ஆண்டு ஜுன் 12-ம் திகதி மசாசூட்டெஸ் மாநிலத்தில் உள்ள மில்டன் நகரில் பிறந்தார் ஜார்ஜ் புஷ். அமெரிக்காவின் யேழ் பல்கலையில்படித்த ஜார்ஜ் புஷ், 18-வது வயதில் அமெரிக்க விமானப்படையில் இணைந்து, 2-ம் உலகப்போரில் பங்கேற்றார்.

2-ம் உலகப் போரின் போது, விமானப்படையில் இடம் பெற்று விமானத்தில் பறந்தபோது, ஜப்பானிய படையால் விமானம் சுடப்பட்டு பசிபிக் கடலில் விழுந்தது. அந்த விமானத்தில் இருந்த ஜார்ஜ் புஷ் பராசூட் மூலம் உயிர்பிழைத்து, அமெரிக்க படையினரால் காப்பாற்றப்பட்டார்.

கடந்த 1960-களில் அமெரிக்க அரசியலுக்குள் அடியெடுத்து வந்த புஷ் 30 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புக்களை வகித்தார். அமெரிக்க செனட்டராகவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினராகவும், குடியரசுகட்சியின் உள்ளூர் தலைவராகவும் புஷ் பதவி விகித்துள்ளார். ஐநாவுக்கான அமெரிக்கத் தூதராகவும், சீனாவுக்கான அமெரிக்கத்தூதராகவும், சிஐஏ இயக்குநராகவும் புஷ் பணியாற்றியுள்ளார்.

இவரின் பதவி காலத்தில்தான் வளைகுடா நாடான ஈராக் நாட்டுடன் போரிட்டு, வலிமையான அந்நாட்டு ஜனாதிபதி சதாம் ஹுஸைன் தோற்கடிக்கப்பட்டார்.

இவர் குறித்த 10 முக்கிய தகவல்கள்:

1) இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய சீனியர் புஷ், அப்போது ஜப்பான் விமானப்படை தாக்குதலில் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். இவர் பயணம் செய்த கப்பலை குறி வைத்து ஜப்பான் தாக்குதல் நடத்தியபோது, அங்கு வந்த அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் இவரை பத்திரமாக காப்பாற்றியது.

2) ராணுவத்தில் இருந்து விலகிய சீனியர் புஷ் 1960களில் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் காலடி எடுத்து வைத்தார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவர் அதில் பெரும் பணம் சம்பாதித்தார்.

3) வர்த்தகத்தில் சேர்த்த பணத்துடன் புகழும் சேர அவர் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். குடியரசுக் கட்சியில் சேர்ந்த அவர் பல பொறுப்புகளை வகித்தார். கட்சியின் தலைவர் பதவியையும் கைபற்றினார்.

4) அமெரிக்க செனட் சபைக்கு போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார். இதுமட்டுமின்றி மாகாண சபை தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனாலும் வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்டு வென்றார்.

5) 1980-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக பெரும் பிரயாசை செய்தார். ஆனால் ரொனால்டு ரீகனிடம் தோற்றுப் போனார். எனினும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வென்றார்.

6) நீண்டகால அரசியல் போராட்டத்தில் 1988-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.

7) அமெரிக்க ஜனாதிபதியாக சீனியர் புஷ் பதவியேற்ற காலம் முக்கியமானது. அமெரிக்கா - ரஷ்யா இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்த காலகட்டம். அப்போது 1990-ம் ஆண்டு நடந்த வளைகுடா போர் மிக முக்கியமானது. குவைத் நாட்டை ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் ஆக்ரமிக்க அவருக்கு எதிராக அணி வகுத்தார் சீனியர் புஷ். உலக நாடுகளை சதாமுக்கு எதிராக திரட்டி வெற்றி கண்டார். குறிப்பாக அரபு நாடுகளையும் அமெரிக்கா பக்கம் ஈர்த்து சதாமை சாய்த்து அவரது ராஜ தந்திரமாக பார்க்கப்பட்டது.

8) வளைகுடா போரால் புகழின் உச்சியை தொட்ட சீனியர் புஷ், 1992-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பில் கிளிண்டனிடம் தோற்றுபோனது அதிர்ச்சி நிகழ்வே.

9) அமெரிக்காவில் வாரசு அரசியல் என்பது மிகவும் அரிதான ஒன்றாகும். எனினும் சீனியர் புஷ்ஷை வாரிசு அரசியலின் தந்தை என்றே அமெரிக்க ஊடகங்கள் வர்ணிக்கும். சீனியர் புஷ்ஷுன் மகன் ஜார்ஜ் புஷ் தந்தையுடன் வசித்த அதே வெள்ளை மாளிகைக்கு ஜனாதிபதியாக திரும்பி வந்து 8 ஆண்டுகள் அந்த பதவியை வகித்தார். மற்றொரு மகன் ஜெப் புளோரிடா மாகாண ஆளுநராக பதவி வகித்தார். அதுபோலவே புஷ் குடும்பத்தைச் சேரந்த பலர் மாகாண அளவில் பல பதவிகளை வகித்தனர். ஆறு குழந்தைகளின் தந்தையான சீனியர் புஷ்ஷூக்கு ஏராளமான பேரன், பேத்திகளும் உண்டு. இதனால் அவரது குடும்பம் மிக பெரியதாக திகழ்ந்தது.

10) ஜனாதிபதி பதவியை விட்டு விலகியபோதிலும் நீண்டகாலம் அவர் பொது வாழ்க்கையில் இருந்தார். அரசியலில் இருந்து ஒதுங்கினாலும், சுனாமி நிதி திரட்டியது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வந்தார். தான் சார்ந்த குடியரசு கட்சி வேட்பளர் ட்ரம்புக்கு எதிராக கடந்த தேர்தலில் சீனியர் புஷ் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.



George W. Bush, and his father Former President George H.W. Bush wave to the crowd before the Texas Rangers host the San Francisco Giants in Game Four of the 2010 World Series

American politician George H.W. Bush takes the oath of office as he is sworn in as 41st President of the United States by Chief Justice William Rehnquist at the US Capitol in 1989


Navy Lieutenant George Bush and Barbara Pierce get married in the First Presbyterian Church in Rye, New York on January 6, 1945

Bush is seen as a Naval aviator cadet in 1943 

Portrait of the Bush family sitting in front of their home in Kennebunkport, Maine in 1986

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top