நாடு அராஜக
நிலையிலோ, ஸ்திரமற்ற நிலைமையிலோ
இல்லை அவ்வாறு
யார் கூறுகின்றார்கள்?
ஜனாதிபதி கேள்வி
இது ஒரு நாள், இரண்டு நாள் நெருக்கடியல்ல
என்றும் தெரிவிப்பு
நாடு
அராஜக நிலையிலோ,
ஸ்திரமற்ற நிலைமையிலோ
இல்லை எனவும்
அவ்வாறு யார்
கூறுகின்றார்கள் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
கேள்வி எழுப்பியுள்ளார்.
வாராந்த
சிங்கள பத்திரிகை
ஒன்றுக்கு வழங்கிய
நேர்காணலில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
கேள்வி
- நடந்த அரசியல்
மாற்றங்களுடன் நாட்டில் அராஜக மற்றும் ஸதிரமற்ற
நிலைமை ஏற்பட்டுள்ளன
என்ற குற்றச்சாட்டில்
இருந்து நீங்கள்
விடுபட முடியுமா?
பதில்
- யார் அப்படி
கூறுகின்றனர். மக்கள் அன்றாடம் தமது வேலைகளில்
ஈடுபடுகின்றனர். வர்த்தகங்கள் நடக்கின்றன.
பிரச்சினைகளும்,
நெருக்கடிகளும் இல்லை. அனைத்து சேவைகளும் வழமை
போல் நடக்கின்றன.
அராஜகம் மற்றும்
ஸ்திரமின்மை என்பன அரசியல் வார்த்தைகள்.
கேள்வி
- எனினும் ஒக்டோபர்
26ஆம் திகதி
எடுத்த தீர்மானம்
மற்றும் அடுத்தடுத்து
நிகழ்ந்த சம்பவங்களுக்கு
அடிப்படையாக பொறுப்புக்கூற வேண்டியவர் நீங்கள். இப்படியான
தீர்மானத்தை எடுக்க காரணமாக அமைந்த காரணம்
என்ன?
பதில்
- ரணில் விக்ரமசிங்கவுக்கு
தேவையான வகையில்
நாட்டை அழிக்க
இடமளிக்க வேண்டும்
என்றா கூறுகின்றீர்கள்.
ஊழல், மோசடிகள்,
கொள்ளை, நாட்டை
காட்டிக்கொடுக்கும் வேலைகள் நடக்கும்
போது வேடிக்கை
பார்க்க முடியுமா?.
அதனை
தடுத்தது நான்
ஏற்படுத்திய ஸ்திரமின்மையை, நெருக்கடியை
ரணிலே உருவாக்கியுள்ளார்.
இது ஒரு
நாள், இரண்டு
நாள் நெருக்கடியல்ல.
கடந்த
மூன்று ஆண்டுகளாக
இருந்த நெருக்கடி
என்பது இரகசியமான
விடயமல்ல. அமைச்சரவையில்
மோதல்கள், அதற்கு
வெளியில் நடந்தவை
என்பன கொலை
சதித்திட்டம், கொள்ளை, ஊழல், காட்டிக்கொடுப்பு என்பவற்றுடன் ஏற்பட்ட பிரதிபலனே என
ஜனாதிபதி கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment