சிறிலங்கா ஜனாதிபதி குழம்பிவிட்டாரா?
ராஜபக்ஸவினரால்
தனது உயிருக்கு
ஆபத்து இருந்தது
என்று தேர்தல்
மேடையைக் கவருவதற்காக,
கூறிய
கட்டுக்கதையே அது என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
“அவையெல்லாம்,
அரசியல் மேடைகளில்
குற்றம்சாட்டப்பட்ட வெறும் அரசியல்
பேச்சுக்கள்.
ஆங்கில
வாரஇதழ் ஒன்றுக்கு
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன நேற்று
செவ்வி ஒன்றை
அளித்திருந்தார்.
ராஜபக்ஸ
தேர்தலில் வென்றிருந்தால், நீங்களும்
உங்களின் குடும்பமும்,
ஆறு அடி
நிலத்துக்குள் புதைக்கப்பட்டிருப்போம் என்று
தெளிவாக கூறியிருந்தீர்களே
என்று கேள்வி
எழுப்பப்பட்டது.
அதற்கு
அவர், ”மஹிந்த
ராஜபக்ஸ என்னைப்
படுகொலை செய்ய
சதித்திட்டம் தீட்டினார் என்று எந்த தகவலும்
இல்லை. அவை
வெறுமனே, தேர்தல்
மேடைகளில், அங்கிருப்பவர்களைக் கவருவதற்காக
கூறியவை தான்”
என்று பதிலளித்துள்ளார்.
அத்துடன்
இந்தப் பதிலைக்
கூறி விட்டு,
செவ்வி கண்ட
ஊடகவியலாளரைப் பார்த்து நக்கலாக சிரித்திருந்தார்.
அப்படியானால்
நாட்டு மக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் ஜனாதிபதி மீது சட்டநடவடிக்கைஎடுக்கமுடியாதா?
என அவருக்கு வாக்களித்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுமாத்திமரல்ல
ஜனாதிபதி நாட்டின் தேசியக் கீதம் இசைக்கும்போது தனது கையை அசைத்து தேசிய கீதத்திற்கு
மரியாதை செலுத்தாதவராக செயல்பட்டிருக்கிறார்.
கூட்டமைப்புக்கும் , ஐதேகவுக்கும் சந்திப்புக்காக ஒதுக்கிய நேரத்தில்
மஹிந்தவுடன் ஜனாதிபதி இருந்துள்ளார். இதிலும் இவர்நம்பிக்கையுடன் செயல்படவில்லை.
0 comments:
Post a Comment