வயிற்று வலியால் துடித்த மாணவன்
- பெற்றோர்களுக்கோர் எச்சரிக்கை
க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு
தோற்றவிருந்த மாணவன் ஒருவர் வயிற்றுவலி காரணமாக
கல்முனை அஷரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில்
சத்திரசிகிச்சை நிபுணர் மொகமட் சமிமின் முயற்சியின்
பலனாக மாணவனுக்கு
சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு
நேற்று ஆரம்பமான
பரீட்சைக்கு தோற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது
குறித்து வைத்தியசாலையின்
சத்திரசிகிச்சை நிபுணர் தனது முகப்புத்தகத்தின் வாயிலாக தெரிவித்துள்ளதாவது,
வலது
பக்க அடி
வயிற்று நோவுடன்
காலத்தை வீணாக்காதீர்கள்.
பரீட்சைக்
காலங்களில் பிள்ளைகளுக்கு வயிற்று நோவுகள் வரும்
போது பெற்றோர்கள்
,பிள்ளைகள் Stress னால் சொல்கிறார்கள்
என்று கவயீனமாக
இருப்பதுண்டு அல்லது பிள்ளை கட்டாயம் பரீட்சை
எழுத வேண்டுமென்று
உயிராபத்து வரும் நிலையிலும் கவனயீனமாக இருப்பதுமுண்டு.
சிறந்த
உதாரணமொன்றை படிப்பினைக்காக கூறலாம் என்று நினைக்கின்றேன்.
நாளை
சாதாரண தர
பரீட்சையை (O/L) எழுதவிருக்கும் மாணவனொருவன்
வலது பக்க
அடிவயிற்று நோவுடன் வந்த போது உடனடியாக
சத்திர சிகிச்சையை
செய்ய வேண்டும்
என்று நான்
கூறியதற்கு சத்திரசிகிச்சை என முடிவுக்கு வந்த
பெற்றோர்கள் அவர்களுடைய அனுமதியை எழுத்து மூலம்
வழங்கி சத்திரசிகிச்சையின்
பின்பு ஆனந்தமடைந்தனர்.
வயிற்றினுள்
குடல் வளரி
வீங்கி வெடிக்க
காணப்பட்டது.
சத்திர
சிகிச்சை வெற்றிகரமாக
முடிவடைந்து மாணவனும் சுகமாய் நாளை O/L பரீட்சைக்கும்
ஆயத்தமாகின்றார். அல்ஹம்துலில்லாஹ்.
ஆகவே
appendicitis என்று confirm ஆனால் தயவுசெய்து
Surgery க்கு உட்படுத்துவது சிறந்தது
வெடித்தால்
உயிருக்கு ஆபத்து
Just after Surgery 11.30 pm
சத்திரசிகிச்சை
நிபுணரின் திறமைக்கும்,
முயற்சிக்கும் பலரும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இவர் அண்மைக்
காலங்களில் பல சிறந்த சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வெற்றி கண்டமையும் குறிப்பிடத்தகது.
0 comments:
Post a Comment