பதற்றத்தை ஏற்படுத்த
உச்ச நீதிமன்றத்தை சுற்றிவளைக்க
திட்டமிடும் மஹிந்த தரப்பு



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 7ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

தீர்ப்பு வழங்கும் தினத்தன்று பதற்றமான சூழல் ஒன்றை ஏற்படுத்துவதற்கு ராஜபக்ஸ தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.

இதற்கான நடவடிக்கைகளை ராஜபக்ஸர்களின் விசுவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் சட்டத்தரணிகளும் அடங்குவதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மனு மீதான தீர்ப்பு ஜனாதிபதிக்கு பாதகமாக அமையும் என்பது சட்டத்துறை பிரபலங்களின் கருத்தாகியுள்ளது. அதற்கமைய இந்த தீர்ப்பு அமைந்தால் அது ஜனாதிபதி மற்றும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு பாரிய அரசியல் தோல்வியாகும்.

இதேவேளை நேற்றைய தினம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை மஹிந்த உட்பட தரப்பினர் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தொடர்ந்து அரசாங்கத்தை நடத்தி செல்வதற்கு மஹிந்த தரப்பு திட்டமிட்டுள்ளனர்.

அதற்கமைய எதிர்வரும் 7ஆம் திகதி நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படுவதற்கும், நீதிமன்றத்தை சுற்றிவளைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இந்த வழக்கின் தீர்ப்பு இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கிய சந்தர்ப்பமாகும் என சர்வதேச மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top