‘பிரதமராக அனுர குமார திசநாயக்க’
– போலி செய்தியால் பரபரப்பு
பிரதமராக
அனுரகுமார திசநாயக்கவை,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
நியமித்துள்ளார் என்று நேற்றிரவு சமூக வலைத்தளங்களில்
பரவிய போலிச்
செய்தியால் குழப்பம் ஏற்பட்டது.
பிபிசி
சிங்கள சேவையின்
செய்தியாளர் அஸ்ஸம் அமீனின் டிவீட்டர் பதிவு போன்று,
இந்தப் போலிச்
செய்தி, சமூக
ஊடகங்களில் பரப்பப்பட்டது.
ஊடகவியலாளர்
அஸ்ஸம் அமீனின்,
டிவீட்டர்
முகப்புப் படத்தை
பயன்படுத்தி இந்தப் போலிச் செய்தி வெளியாகியது.
எனினும்,
இது தனது
டிவீட்டர் பதிவில்
இருந்து வெளியிடப்படவில்லை
என்றும், இது
போலியான செய்தி
எனவும், அஸ்ஸம்
அமீன் பதிவிட்டுள்ளார்.
#FakeNews: This tweet never originated from my account and the information contained in the fake tweet is inaccurate. An edited image of my account is being used to spread misinformation.
0 comments:
Post a Comment