12.03.2019 அன்று நடைபெற்ற
அமைச்சரவைக்
கூட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட
தீர்மானங்கள்
01. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருதரப்பு சமூகப் பாதுகாப்பு
உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக இறுதி திருத்த சட்ட மூலத்தை மேற்கொள்ளுதல்
(நிகழ்ச்சி நிரலில் 06ஆவது விடயம்)
நாட்டில்
நிலவுகின்ற தொழிலாளர் சட்டத்திற்கு அமைவாக இந்த நாட்டில் தொழில்களில் ஈடுபட்டுள்ள
வெளிநாட்டு ஊழியர்களின் 1956ஆம் ஆண்டு
இலக்கம் 15 கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின்
மூலம் உள்ளடக்கப்படுவதுடன் இந்த ஊழியர்கள் இந்த நாட்டின் தமது தொழில் வாய்பை
பூர்த்தி செய்து தமது நாட்டிற்கு செல்லும் பொழுது அவர்களினால் அந்த
காலப்பகுதிக்கான ஊழியர் சேமலாப நிதிக்கு செலுத்தப்பட்ட முழுமையான பங்களிப்புத்
தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகை முதலானவற்றை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு
உரிமைகளை பெற்றுக்கொள்வர். அதே போன்று இந்தியாவில் உள்ள சட்டத்திற்கு அமைவாக
அந்நாட்டில் பணியாற்றும் இலங்கை ஊழியர் ஒருவருக்கு அந்நாட்டு சமூகப் பாதுகாப்பு
முறைக்கு பங்களிப்பு செய்வதுடன் அந்த ஊழியரின் பங்களிப்பு நிதியை 58 வயது பூர்த்தியடையும் வரையில் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகை
இல்லை. இந்தப் பிரச்சினைக்கான தீர்வுக்காக இந்தியாவில் தொழிலில் ஈடுபட்டுள்ள
இலங்கையர்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில்
சமூகப் பாதூப்பு உடன்படிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
இலங்கை ஊழியர் சேமலாப நிதிக்கு பங்களிப்பு தொகையை செலுத்தும் இலங்கை ஊழியர்களுக்கு
தொடர்ந்தும் இந்தியாவில் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பணத்தை செலுத்த வேண்டிய
தேவை இல்லை. இதே போன்று இலங்கையில் ஊழியர் சேமலாப நிதிக்கு பங்களிப்பு செலுத்தாது
இந்தியாவின் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பங்களிப்பு செய்யும் இந்தியாவில்
கடமையில் ஈடுபட்டுள்ள இலங்கை ஊழியர்களுக்கு அவர்களது பங்களிப்பு நிதியை இந்தியாவில்
தொழிலை பூர்த்தி செய்யும் சந்தர்ப்பத்தில் மீள பெற்றுக் கொள்வதற்கு
விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். இதற்கமைவாக இலங்கை மற்றும்
இந்தியாவிற்கு இடையில் சமூக பாதுகாப்பு உடன்படிக்கையை மேற்கொள்ளக் கூடிய வகையில் 1958ஆம் இல 15 கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில்
திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அந்தஸ்து அற்ற தொழில் மற்றும் தொழிற்சங்க
அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் மாணவர்களுக்கு
வழங்கப்படும் மஹாபொல புலமைப்பரிசில்க்கான தவணைக் கொடுப்பனவை அதிகரித்தல்
(நிகழ்ச்சி நிரலில் 27ஆவது விடயம்)
இலங்கை
உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் தொழில்நுட்ப கல்வி தொடர்பில் தேசிய டிப்ளோமாவை
வழங்குவதற்காக இந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனமாவதுடன் இதுவரையில்
இதற்கு உட்பட்ட பிரதேச மட்டத்தில் 19 மத்திய
நிலையங்களிலும் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள்
கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். உயர்கல்வி தொடர்பாக மாணவர்களுக்காக
வழங்கப்படும் மஹாபொல மற்றும் மாணவர் உதவி தொகை 2015ஆம் ஆண்டில் அதிகரிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவர்களுக்காக ரூபா 5000 மாதாந்த புலமைப்பரிசில் நிதி உதவியும், ரூபா 4000 மாதாந்த பல்கலைக்கழக புலமைப்
பரிசிலும் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மாணவர் ஒருவருக்கு 1500 ரூபா புலமைப்பரிசிலும் உரித்தாகின்றது. இதற்கமைவாக இலங்கை உயர்கல்வி
தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவர்களுக்கு இதுவரை செலுத்தப்பட்ட மஹாபொல
புலமைப்பரிசில் நிதியுதவி தவணைக்கொடுப்பனவான ரூபா 1500வை, ரூபா 2500 வரையில் அதிகரிப்பதற்காக நகரதிட்டமிடல் நீர் விநியோகம் மற்றும்
உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
03. அரச நிறுவனங்களின் வளாகப் பகுதிகளில் வெற்றிலை புகையிலை மற்றும்
பாக்குடன் தொடர்புபட்ட தயாரிப்புக்களின் பாவணை மற்றும் விற்பனையை தடை செய்தல்
நிகழ்ச்சி நிரலில் 32ஆவது விடயம்
வெற்றிலை
புகையிலை மற்றும் பாக்குடன் தொடர்புபட்ட தயாரிப்பின் காரணமாக வாய்புற்று நோய்
ஏற்படக்கூடிய நிலைமையை கவனத்திற் கொண்டு அரச நிறுவனங்களில் அலுவலக பணியாளர்
மற்றும் அந்த நிறுவனங்களுக்கு வருகைத் தரும் பொதுமக்கள் மற்றும் நிறுவன வளவில்
வெற்றிலை புகையிலை மற்றும் பாக்கு உள்ளிட்ட தயாரிப்பை பயன்படுத்துவதை தடுப்பதற்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதற்கான ஒழுங்கு விதிகளை மேற்கொள்வதற்காக
அரச நிர்வாக சுற்று நிருபத்தை வெளியிடுவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய
வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்திக்கான உடனடி
தடைகளை நீக்குதல் (நிகழ்ச்சி நிரலில் 36ஆவது
விடயம்)
2030ஆம் ஆண்டளவில் மின் உற்பத்தியில் 60 சதவீத்தை மீள்சுழற்சி முறையின் மூலம் பெற்றுக்கொள்வதற்கு
திட்டமிட்டப்பட்ட போதிலும் புதிய அனல்மின் நிலைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை
மின்சார சபை இலங்கை பொது மக்கள் பயன்பாடு ஆணைக்குழு மற்றும் இலங்கை
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அதிகார சபைக்கிடையில் நிலவும் உடனடி மற்றும் கொள்கை
அடிப்படையில் மாற்றத்தின் காரணமாக இவ்வாறான முக்கிய மின் உற்பத்தி அபிவிருத்தி
திட்டத்தை மேற்கொள்ளும் போது சில பிரச்சினைகளை எதிர்கொள்ளப்படுவதாக
அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 10மெகா வோட்
அல்லது அதற்கு குறைவான மின் அழுத்தத்தைக் கொண்ட சம்பிரதாயமற்ற புதுப்பிக்கத்தக்க
எரிசக்தி மூலம் மின்சாரத்தை கொள்வனவு செய்வதில் மேலும் சிறப்பான நடைமுறை ஒன்றை
கடைபிடிக்கக் கூடிய வகையில் 2019 ஆம் ஆண்டு இல 20இன் கீழான இலங்கை மின்சக்தி அதிகார சட்டம் 2013 ஆண்டு இலக்கத்தின் 31இன் கீழான
இலங்கை மின்சார சட்டத்தில் திருத்ததை மேற்கொள்வதற்கு மின்சக்தி எரிசக்தி மற்றும்
வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. தூக்கும் இயந்திரம் (ELEVATORS) மற்றும் மின்சார நகரும் படிக்கட்டுக்கள் இயந்திரம் (ESCALATORS)
ஆகியவற்றுக்கான இலத்திரனியல் பாதுகாப்புக்கான
பரிந்துரைக்கு சான்றிதழைப் பெற்றுக் கொடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 32ஆவது விடயம்)
இலங்கையில்
கட்டிடங்களில் பொருத்தப்பட்டடுள்ள மின்தூக்கி இயந்திரம் ELEVATORs மற்றும் மின்சார இயந்திர நகரும் படிக்கட்டுக்கள் (ELEVATORS) ஆகியவற்றில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களில் குறிப்பிடத்தக்களவு
மின்சாரம் தடைப்படுவதினால் ஏற்படும் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை
தவிர்த்துக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடனான உடன்பாட்டில் இயந்திரம்
தொடர்பில் தரச் சான்றிதழை விநியோகிப்பதற்காக பொருத்தமான நடைமுறை ஒன்றை
அறிமுகப்படுத்த வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கையில்
பொருத்தப்பட்டுள்ள அனைத்து மின்தூக்கி இயந்திரம் மற்றும் மின்சார இயந்திர நகரும்
படிக்கட்டுக்களுக்கான இலத்திரனியல் பாதுகாப்பு தொடர்பில் சான்றிதழ் ஒன்றை
பெற்றுக்கொள்ளும் தேவையை ஏற்படுத்துவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக
அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. இலங்கை காணி மண்போட்டு சீரமைத்தல் மற்றும் அபிவிருத்தி செய்யும்
கூட்டுத்தாபனத்தின் பெயரை சுருக்கமாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனமாக
திருத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 45ஆவது விடயம்)
1968ஆம் ஆண்டு இல 15இன் கீழான
கொழும்பு மாவட்டத்தில் (தாழ்ந்த காணி உள்ள பிரதேசங்களில்) மண் போட்டு நிரப்புதல்
மற்றும் அபிவிருத்தி செய்தல் சட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் ( தாழ்ந்த
பிரதேசக் காணி) மண் போட்டு நிரப்புதல் மற்றும் அபிவிருத்தித் திட்ட சபை
அமைக்கப்பட்டதுடன் அதற்கான சுருக்கமான பெயர் 1982ஆம் ஆண்டு இலக்கம் 53 இன் கீழான
சட்டத்தில் திருத்தத்தை ஒன்றிணைத்து இலங்கை காணி அபிவிருத்தியை மேற்கொள்ளும்
கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த நிறுவனத்தினால் தேசிய
அபிவிருத்திப் பணிக்காக வழங்கப்பட்ட பங்களிப்யை கவனத்தில் கொண்டு இதன் பெயரை
கூட்டுத்தாபனமாக திருத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம்
வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருத்த சட்ட
மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக பெருநகர மற்றும் மேல்மாகாண
அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு
அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. சுகித புரவற அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி
நிரலில் 16ஆவது விடயம்)
நாட்டின்
பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் வசதி மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி
செய்யும் நோக்கில் சுகித புரவற திட்டம் 2016ஆம் ஆண்டு தொடக்கம் பெரு நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி
அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் கீழ் இது வரையில் 12 894 மில்லியன் அளவில் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து
மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் மொத்த வர்த்தக சந்தைகள் பஸ்தரிப்பு நிலையங்கள்
பூங்காக்கள் வாகன தரிப்பிடங்கள் நடமாடும் பாதை வாராந்த சந்தை மீன் சந்தை நகர
மண்டபங்கள் கட்டிடத் தொகுதி நகர மத்திய நிலையங்கள் சிறவர் பூங்கா கரையோர பூங்கா
உள்ளிட்ட வகையில் 2019ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவற்கான
வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால்
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. 1993ஆம் ஆண்டு இலக்கம் 52 இன் கீழான
தேயிலை ஆராய்ச்சி சபை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல் நிகழ்ச்சி நிரலில் 49ஆவது விடயம்)
தேயிலை
உற்பத்தி தொடர்பாக சுற்றாடல் பாதுகாப்புக்கான நடவடிக்கையை மேற்கொள்ளுதல் தேயிலை
சபையின் ஆராய்ச்;சிப் பெறுபேற்றை பல்வேறு தரப்பினருக்கு
வழங்குதல் தேயிலை ஆய்வு சபை சட்டம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கு
இடையில் உள்ள அனுகூலத்தை தடுப்பதற்காக ஒழுங்குகளை மேற்கொள்ளுதல் மற்றும் தேயிலை
ஆராய்ச்சி சபையின் பணிப்பாளர் சபையின் இணக்கப்பாட்டை மேற்கொள்ளுதல் போன்ற
திருத்தங்களை உள்ளடக்கி 1993ஆம் ஆண்டு
இலக்கம் 52 இன் கீழான தேயிலை ஆராய்ச்சி சபை
சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி
வழங்க்ப்பட்டது. அதற்கமைவாக தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்ட மூலத்தை
பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன்
திசாநாயக்க சமரப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09 உத்தேச
யகா என்ற கால்வாயை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 55 ஆவது விடயம்)
மாகந்துர
கந்தேபொல கொஸ்வத்தை மற்றும் யக்தேஷ்யாவ ஆகிய பிரதேசங்களில் விவசாயிகளுக்கு
நீர்பாசன வசதியை வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்ட பழமையான யகாமெதி என்ற கால்வாய்
கைவிடப்பட்டிருந்தது. இதனால் அமுன கைவிடப்பட்டிருந்ததும் பிரதேசங்களில் விவசாயிகள்
சிறு மற்றும் பெரும்போகங்களிலும் பாரிய நீர் பற்றாக்குறை தட்டுப்பாட்டை எதிர் கொண்டிருந்தனர்.
இந்த நீர் பற்றாக்குறைக்கு தீர்வாக புதிய இடத்தில் அதற்கான வசதிகளை ஏற்படுத்தி
மாஓயா நீரை ரன்மல் ஓயாவில் திருப்புவதற்காக புதிய யகா என்ற கால்வாய் அபிவிருத்தி
பரிந்துரைக்கான திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் மாஓயா ஊடாக 76.8 மீட்டர் நீளத்தையும் இதன் மூலம் மாஓயா ஊடாக 76.8 மீட்டர் நீளமான கால்வாயை அமைத்தல் முக்கிய கால்வாய் ஊடாக
நுழைவுக்கான (Intake Structure) நிர்மாணித்தல் 14.8 கிலோ மீற்றர் நீளமான கால்வாயை நிர்மாணித்தல் மற்றும் நீர் பிரிந்து
செல்வதற்கான கால்வாயை அமைத்தல் உற்பத்தி பிரதேசத்தில் முழுவதும் மேம்படுத்தல்
கந்தேபொல ஆறு ஊடாக அனுகம்பிட்டிய களஞ்சிய குளத்தை நிர்மாணித்தல் மற்றும் உத்தேச
அகழ்வில் ஆக உயர்மட்டத்தில் வெள்ளப் பாதுகாப்புக்கான மதிலை அமைப்பதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக உத்தேச பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்காக
தேவையான தள ஆய்வு மற்றும் சுற்றாடல் மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக விவசாய கிராமிய
பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசன மற்றும் கடற்றொழில் மற்றும்
நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான உத்தேச விலை சூத்திரம்
(நிகழ்ச்சி நிரலில் 56ஆவது விடயம்)
இறக்குமதி
செய்யப்படும் பால்மா விலைக்கான பொருத்தமான தீர்வை காணும் நோக்கில் நியமிக்கப்பட்ட
குழுவினால் சர்வதேச சந்தையில் நிலவும் விலை மற்றும் கடைபிடித்தல் விதிகளை கவனத்தில்
கொண்டு நுகர்வோருக்கும் அரசாங்கத்துக்கும் பால்மா தொழிற்துறையில்
ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பெறுபேறு கிடைக்கும் வகையில் இறக்குமதி பால்மாவிற்கு விலை
சூத்திரமொன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விலை சூத்திரத்தை நுகர்வோர் அதிகார
சபை மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடை
அபிவிருத்தி நீர்பாசன மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹெரிசன் சமரப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. தேசிய கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ கட்டமைப்பை
மறுசீரமைப்பதற்காக 1985ஆம் ஆண்டு இல 28 கீழான தேசிய கல்வி நிறுவன சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல்
(நிகழ்ச்சி நிரலில் 63ஆவது விடயம்)
கல்வித்துறையில்
தரமான அபிவிருத்திக்காக விடயதான அமைச்சருக்கு ஆலோசனை வழங்குதல் கற்கைநெறி
அபிவிருத்தி , கல்வித்துறையில் தொழிற்துறையாளர்களின்
தொழில் அபிவிருத்திப் பணிகள் மற்றும் அதற்கான பட்டப்படிப்பின் பின் வழங்குதல்
கல்வித்துறையில் ஆய்வு மற்றும் மதிப்பீடுகளை நடத்துதல் முதலான பணிகளை
நிறைவேற்றுவதற்காக தேசிய கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின்
நிர்வாகத்திற்காக சபையொன்று அமைக்கப்பட்டதுடன். நடப்பு மற்றும் எதிர்கால தேவையை
கவனத்திற் கொண்டு இந்த நிறுவனத்தின் நிர்வாகப்பணிகளை மறுசீரமைப்பு செய்வதன் தேவை
இருப்பதாக கண்காணிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தேசிய கல்வி நிறுவனத்தில்
பணிப்பாளர் சபையின் தலைவர் நிறுவனத்தின் நிர்வாக சபையின் வதிவிட பிரதிநிதியாக
உத்தியோகப்பூர்வமாக அதிகாரத்தில் இருக்கும் வகையில் செய்தலுக்கான தேவை இருப்பதாக
கண்டறியப்பட்டுள்ளது.1985 இல 28 கீழான தேசிய கல்வி நிறுவன சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
12. விளையாட்டுக்களில் ஈடுபடும் பொழுது பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட
ஊக்க மருந்து பொருட்கள் பட்டியலை உள்ளடக்கிய கட்டளையை பாராளுமன்றத்தில்
சமரப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)
2013ஆம் ஆண்டு இலக்கம் 33 கீழான
விளையாட்டுகளில் ஈடுபடும் போது ஊக்குவிப்பு பொருட்களை மேற்கொள்வதற்கு எதிரான
இணக்கப்பாடு சட்டத்தின் 34 (1) சரத்தின் கீழ்
விளையாட்டுக்களில் ஈடுபடும் போது பயன்படுத்தப்படும் ஊக்க பொருட்களின் பட்டியல்
அடங்கிய 2019ஆம் ஆண்டு பெப்ரவரி 11 இலக்கம் 2110ஃ2 இன் கீழான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டு இல 4 கீழான
கட்டளைகள் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக சமர்ப்பிப்பதற்கு
தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின்
பெர்னான்டோ சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. ஹிமோபீலியா நோயாளர்களுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்தை கொள்வனவு
செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 75ஆவது விடயம்)
ஹிமோபிலியா
நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்து மற்றும் மொனொகுலோனல்
பியுரி அசிட் மற்றும் டிடர்ஜன் டிரர்ட டிரைட் பெக்டர் வைல்ஸ் 52ஆயிரம் ரூபாவிற்கு பெற்றுக்கொள்வதற்கான பெறுகை அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 317200 அமெரிக்க டொலருக்கு சுவிற்சிலாந்தின் M/s Baxalta Gmph என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்கு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச
வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்து வகைகளை
கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 76ஆவது
விடயம்)
நீரிழிவு
நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் பயிபசிக் ஐசோ பேன் இன்சுலின் 10 மில்லி மீற்றர் 8 50 000 ஊசி
மருந்தை கொள்வனவு செய்வதற்காக பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற்
பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 13 17 500 அமெரிக்க
டொலர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிலுள்ள Gulf Pharmaceutical
Industries என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்கு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச
வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. இருதய பாதிப்பு உள்ள நபர்களுக்கு வழங்கப்படும் டெடனர்க் டிப்ளேர்ஸ்
என்ற 10ஆயிரம் மருந்து ஊசிகளை கொள்வனவு
செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 77ஆவது விடயம்)
இருதய
பாதிப்பு ஏற்பட்ட நபர்கள் இறக்கும் நிலையை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும்
டெடனக்ஸ் டிப்ளேக்ஸ் 40 மில்லிகிராம் 10ஆயிரம் மருந்து ஊசிகளை கொள்வனவு செய்வதற்காக பெறுகை அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 42 50 000 அமெரிக்க டொலர்களுக்கு இந்தியாவில் உள்ள s Boehringer
Ingelheim India Private Limited நிறுவனத்திற்கு
வழங்குவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் டொக்டர்
ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. அநுராதபுரம் வவுனதீவு, மாவ,
பன்னல மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் 28 சூரிய சக்தி மின்உற்பத்தி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தல்
(நிகழ்ச்சி நிரலில் 79ஆவது விடயம்)
2030ஆம் ஆண்டளவில் மின்சக்தி துறையில் 60 சதவீதத்தை புதுபிக்கத்தக்க எரிசக்தியாக மாற்றுவதற்கு அரசாங்கம் தி;ட்டமிட்டுள்ளது. இதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள சூரிய சக்தி
வேலைத்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் வவுனத்தீவு மாவ பன்னல மற்றும் வாழைச்சேனை ஆகிய
பிரதேசங்களில் 1 மெகாவோல்ட் மின் அழுத்தத்துடனான சூரிய
சக்தி மின் உற்பத்தி 28 திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான
ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் குழுவின் சிபாரிசுக்கமைய
தெரிவு செய்யப்பட்ட 28 முதலீட்டாளர்களுக்கு கிலோவோட்ஸ் 1 மணித்தியால விலை 12.84 ரூபா
தொடக்கம் 15.93 ரூபாவரை இடைப்பட்ட தொகைக்கு கொள்வனவு
செய்வதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி
கருணாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. மின்சார சபைக்காக ஏரியல் பண்டல் 3000 கிலோமீற்றரை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 80ஆவது விடயம்)
இலங்கை
மின்சார சபையின் விநியோக வலயத்திற்கான ஏரியல் பன்டல் 3000 கிலோமீற்றர் விநியோகித்தல் மற்றும் வழங்குவதற்கான ஒப்பந்தம்
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 1780.6 மில்லியன் ரூபாவிற்கு வரையறுக்கப்பட்ட ACL Cables என்ற பொது நிறுவனத்திடம் வழங்குவதற்கு மின்சக்தி எரிசக்தி மற்றும்
வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. கிராமிய பொதுமக்களுக்கான குடிநீர் விநியோக பரிந்துரை முறையை
மேம்படுத்துவதற்கான திட்டத்தின் ஆலோசனைக்கான ஒப்பந்தத்தை வழங்குதல் (நிகழ்ச்சி
நிரலில் 81ஆவது விடயம்)
வளர்ந்து
வரும் பிராந்தியத்தில் கிராமிய அடிப்படை வசதிகள் அபிவிருத்தி செய்யும்
வேலைத்திட்டம் (RIDEP) வடக்கு கிழக்கு வடமத்திய மற்றும் ஊவா
மாகாணங்கள் அபிவிருத்தி இலக்கை நோக்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்
கீழ் கிராமிய வீதி மத்திய மற்றும் சிறிய அளவிலான நீர்பாசன வசதிகள் மற்றும்
குடிநீர் வசதி பெற்றுக் கொடுத்தல் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம்
பொதுமக்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்கு
ஏற்றதாகும். இதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல், பிரதேச அபிவிருத்தி தடைகளை குறைத்தல்; மற்றும் பொதுமக்களின் துன்பங்களை போக்குவதற்காக பங்களிப்பு செய்யும்
வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்
இரண்டாவது கட்ட ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிராமிய சமூகத்திற்கான குடிநீர்
நீர் வளங்கல் பரிந்துரைகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் ஆலோசனைச் சேவை
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய
வரையறுக்கப்பட்ட சியொட்ட கன்சல்டன்ட்ஸ் தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்காக உள்ளக
மற்றும் பொது நிர்வாக மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர
அபேவர்தன சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. மென் ரயில் திட்டத்திற்கான ஆலோசனை சேவையை முன்னெடுத்தல் (நிகழ்ச்சி
நிரலில் 83ஆவது விடயம்)
மாலபேயிலிருந்து
கோட்டை வரையில் நியமிக்கப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மென் ரயில் திட்டத்தின்
திட்ட நடவடிக்கைகள் பெறுகைக்குழு நிர்மாணித்தல் கண்காணிப்பு மற்றும் திட்ட
முகாமைத்துவத்திற்காக ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட துணை ஆலோசனை
பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ஜப்பானின் Oriental Consultants Global Co
Ltd, Japan International Consultants For Transportation Co Ltd, மற்றும் Chodai Co Ltd
kw;Wk; Nippon Koei Co Ltd மற்றும் இலங்கையில் Consulting Engineers and Architects Associated Pvt Ltd ஆகிய நிறுவனங்களின் கூட்டு திட்டத்திற்கு வழங்குவதற்காக பெருநகர
மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. பஸ்னாகொட நீர்த்தேக்க திட்ட பொறியியலாளர் பெறுகை மற்றும் ஒப்பந்தத்தை
வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 85ஆவது விடயம்)
கம்பஹா
அத்தனகல்ல மினுவாங்கொ மற்றும் மீரிகம பிரதேசங்களுக்கு தேவையான குடிநீர் மற்றும்
தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை விநியோகிப்பதற்காக தேசிய நீர்வழங்கல் மற்றும்
வடிகாலமைப்புச் சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கம்பஹா அத்தனகல்ல மற்றும்
மினுவாங்கொட ஒன்றிணைக்கப்பட்ட விநியோகத்திட்டத்தில் ஒரு பகுதியாக பஸ்னாகொட
நீர்த்தேக்க திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்தனகலு
ஓயாவின் கிளை ஆறுகளான பஸ்னாகொட ஓயா ஊடாக பஸ்னாகொட நீர்த்தேக்கத்தை
நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது 20.5 மீற்றர் உயரத்தையும் 130
மில்லிமீற்றர் நீளத்தையும் கொண்ட கொங்கிறீட் மதில் உடனான 3.5 மில்லிமீற்றர் கண நீரை தேக்கி வைக்கக் கூடிய வகையில்
நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பொறியியலாளர் பெறுகை
மற்றும் நிர்மாண ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின்
சிபாரிசுக்கமைய 2347.4 மில்லியன் ரூபாவிற்கு சினோ ஐட்ரோ நிறுவனத்திடம்
வழங்குவதற்கு விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசன
மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹெரிசன் சமரப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. ஜய கொள்கலன் பகுதியில் ஆழமான நங்கூரப்பகுதியில் கொள்வனவை
மேம்படுத்துவதற்கான கிரேன்ரி இயந்திரங்களை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 86ஆவது விடயம்)
கொழும்பு
துறைமுகத்திற்கு வரும் பெரும் எண்ணிக்கையிலான கொள்கலன் கப்பல்களை கையாளும் ஆற்றலை
அதிகரிப்பதற்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் ஜய கொள்கலன் இரங்குத்துறை JCT
ஆழமான நங்கூர பகுதியின் கொள்வனவை மேம்படுத்தும்
திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில்
சுற்றுலா துறையினருக்கான கப்பல் தொடக்கம் தரைக்கு கொள்கலன்களை கையாள்வதற்காக ஏற்றி
இறக்கக்கூடிய இயந்திரங்கள் மூன்றை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய வரையறுக்கப்பட்ட சென்ஹாய்
சென்ஹீவா ஹெவி இன்டஸ்ரீஸ் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது, இந்த அங்கீகாரத்திற்கு அமைய இந்த 3 இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான பெறுகை செயற்பாடுகளுக்கான
நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக துறைமுகம் மற்றும் கப்பல் நடவடிக்கைகள் மற்றும்
தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாநயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. சிறுவர் பாதுகாப்பு தேசிய பொறுப்பு நிதியம் (நிகழ்ச்சி நிரலில் 90ஆவது விடயம்)
பல்வேறு
சமூகப் பிரச்சினைகளினால் பாதிக்கப்படும் பிள்ளைகள் பிறப்பு மற்றும் பின்னர்
இடம்பெறும் பல்வேறு விபத்துக்கள் நோய்களின் காரணமாக பாதிப்புக்குள்ளாகும்
சிறுவர்கள் மற்றும் பெற்றோரின் கவனக்குறைவாகும் என்று அல்லது அறியாமை காரணமாக
பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு தேவையான நிவாரணத்தை வழங்குவதற்கு தனிநபர்கள்
மற்றும் அமைப்புக்கள் சுயமாக முன் வருவதுடன் அவர்களது நன்கொடைக்காக பொறுப்புடனும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய நிறுவன கட்டமைப்பொன்று இருப்பது காலத்தின் தேவையாக
அமைந்துள்ளது. இதனால் ஜனாதிபதி செயலாளரின் தலைமையிலான சிறுவர்களை பாதுகாப்போம் -
தேசிய பொறுப்பு நிதியத்தை அமைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த
ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment