மாவட்டப் பாராளுமன்ற
உறுப்பினர்களான
பைஸல் காசீம், எம்.ஐம்.மன்சூர் ஆகியோர்களின்
சிந்தனைக்கு
9 ஆயிரம் விருப்பு
வாக்குகளை வழங்கிய
சாய்ந்தமருது
மக்களின் கவலை
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை
வழங்கும் விடயத்தில் இங்குள்ள மக்களின் சுமார் 9 ஆயிரம் விருப்பு வாக்குகளைப்
பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசீம், எம்.ஐம்.மன்சூர் ஆகியோர்கள் இந்த
மக்களின் விருப்பம் குறித்து எதுவும் தெரிவிக்காது மெளனமாக இருப்பது குறித்து அவர்களுக்கு
விருப்பு வாக்களித்த சாய்ந்தமருது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தற்போதய தேர்தல் முறையில் சாய்ந்தமருது
மக்கள் தொகுதி என்ற ரீதியில்
வாக்களிக்காமல் கட்சிக்கு வாக்களித்து மாவட்டத்தைச்
சேர்ந்த மூன்று பேருக்கு தங்கள் விருப்பு வாக்குகளை வழங்கியிருந்தார்கள்.
அந்தவகையில் சாய்ந்தமருதைச் சேர்ந்த சுமார்
9 ஆயிரம் மக்கள் பைஸல் காசீம், எம்.ஐம்.மன்சூர்
ஆகியோர்களுக்கும் தங்கள் விருப்பு வாக்குகளை வழங்கி
அவர்களை நாடாளுமன்றம் செல்வதற்கு உதவினார்கள்.
இவ்வாறு
தங்களின் விருப்பத்தை வழங்கி தெரிவு செய்யப்பட்ட தொகுதிக்கு அல்லாது மாவட்டத்திற்கான
மக்கள் பிரதிநிதிகளான பைஸல் காசீம், எம்.ஐம்.மன்சூர்
ஆகியோர்கள் சாய்ந்தமருது மக்களின் விருப்பமான தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை விடயத்தில்
பாராமுகமாக இருப்பது சரிதானா? இது நியாயமா? என அவர்களுக்கு விருப்பு வாக்களித்த மக்கள்
கவலையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
சாய்ந்தமருது
மக்களின் நியாயமான நீண்டகால தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு
மாவட்டத்திற்கான மக்கள் பிரதிநிதிகளான பைஸல்
காசீம், எம்.ஐம்.மன்சூர் ஆகியோர்கள் சாய்ந்தமருது மக்களுக்கு துணையாக நின்று செயல்பட்டு
உதவாமல் எதிர்வரும் தேர்தல்களில் எவ்வாறு சாய்ந்தமருது மக்களின் ஆதரவைப் பெறப்போகின்றார்கள்
என்பது பற்றி பைஸல் காசீம், எம்.ஐம்.மன்சூர் ஆகியோர்களும் சிந்திக்க வேண்டும் என இவர்களுக்கு
விருப்பு வாக்களித்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
- மக்கள் விருப்பம்
- மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment