இலங்கையின் சுகாதாரத் துறைக்கு
20 பில்லியன் கொடை வழங்குகிறது ஜப்பான்
இலங்கையின்
சுகாதாரத் துறையை
முன்னேற்றுவதற்கு, 20 பில்லியன் ரூபா
கொடையை வழங்குவதற்கு
ஜப்பானிய அரசாங்கம்
முன்வந்துள்ளது.
சுகாதார
அமைச்சர் ராஜித
சேனாரத்விடம், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா
சுகியாமா இந்த
தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜப்பான்
அனைத்துலக ஒத்துழைப்பு
முகவரகம் ஊடாக
இந்த நிதி
வழங்கப்படும் என்றும் ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு
2020இற்கு முன்னதாக
அறுவைச் சிகிச்சைக்
கூடம் ஒன்றை
வழங்க ஜப்பான்
முடிவு செய்துள்ளது
என்றும், இலங்கையின்
சுகாதார துறையை
வலுப்படுத்த ஜப்பான் தொடர்ந்து ஆதரவு வழங்கும்
என்றும், அவர்
உறுதி அளித்துள்ளார்.
0 comments:
Post a Comment