இன்று சமர்ப்பிக்கப்படுகிறது
2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்
2019ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவுசெலவுத்
திட்டம் இன்று
பிற்பகல் 2 மணியளவில், நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதையடுத்து,
வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான
விவாதம், நாளை
ஆரம்பமாகும். 12ஆம் திகதி வரை நடக்கும்
விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
வரவுசெலவுத்
திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான விவாதம்,
மார்ச் 13ஆம்
திகதி ஆரம்பமாகி, ஏப்ரல் 5 ஆம் திகதி
முடிவடையும். அன்றைய தினம் இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும்.
தற்போதைய
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படும், ஐந்தாவது
வரவுசெலவுத் திட்டம் இதுவாகும்.
இதன்படி, 2019இல்
நாட்டின் தேசிய
வருமானம், 2400 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்றும்,
மொத்த செலவினம்
4550 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த
ஆண்டில் வரவுசெலவுத்திட்ட
பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்,
4.5 வீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment