வரவு செலவுத்திட்ட வாசிப்பு 2019!
ஜூலை முதலாம் திகதி முதல்
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு
2500 ரூபா சம்பள உயர்வு



2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தற்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு வருகின்றது,

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவு, திட்டமான இந்த வரவு செலவுத் திட்டம், சாதாரண மக்களைப் பலப்படுத்தவும் வறுமையை ஒழித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் அனைத்து மக்களினதும் அடிப்படை கல்வி, சுகாதார வசதிகள் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினை வலுப்படுத்த 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

படைவீரர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும். கமாண்டோக்களின் கொடுப்பனவு 5000 ரூபாவாக உயர்த்தப்படும். வாடகைக் கட்டணம் 100% அதிகரிக்கப்படும். சீருடை கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.

ஓய்வூதிய முரண்பாடுகளை சரி செய்ய 12 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

ஜூலை முதலாம் திகதி முதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும். இதற்கென 40 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஆரம்பிக்கப்படும் இலகு ரயில் திட்டத்திற்கு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சேவைக்கு 250 புதிய பஸ்கள், இத்திட்டத்திற்கு 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பஸ் சேவைகளுக்கு முற்கொடுப்பனவு அட்டைகள் மற்றும் GPS சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

பொது போக்குவரத்து சேவை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் பஸ் சேவை அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

போகம்பரை சிறைச்சாலை பொது இடமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கென 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாத்தளை - பெர்னார்ட் அலுவிஹாரே விளையாட்டரங்கும் கொலன்னாவை மல்லமராச்சி விளையாட்டுத் திடலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

சுவசெரிய திட்ட அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு (2 ஆண்டுகளுக்கு மேல்)

தேசிய தொழில் தகுதியுடனான (NVQ) தொழிற்பயிற்சித் திட்டங்களை இலங்கை இராணுவம் நடத்தவுள்ளது.

தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளுக்கு 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

பல்கலைக்கழக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

.பொ. உயர் தரத்தில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு வெளிநாட்டில் பயில நிதியுதவி வழங்கப்படும். ஆகஸ்ட்டில் இத்திட்டம் 14 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்படும். ஹார்வர்ட், ஒக்ஸ்ஃபோர்ட் மற்றும் MIT போன்ற பல்கலைக்கழகங்களுடன் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.

பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ரூ. 32,000 மில்லியன்.

400,000 டொலர்களுக்கும் மேல் முதலீடு செய்த வௌிநாட்டவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குடியிருப்பு விசா .

உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களுடன் இணையாமல், வௌிநாட்டு கட்டுமான நிறுவனங்களால் உள்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களைப் பெற முடியாது.

சுற்றுலா: பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு வௌிநாட்டு நாணய பற்றுச்சீட்டுகளுக்கு NBT நீக்கம்.

நிதி அமைச்சில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.

உள்நாட்டு வருமான சட்டமூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

பிங்கிரிய அபிவிருத்தி வலயத்திற்கு ரூபா 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஏற்றுமதி மூலோபாயத்திற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

புதிதாக மணம் முடித்தவர்களுக்கான கடன் திட்டம்: முதல் வீட்டை வாங்கும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான சலுகை கடன்கள் வழங்கப்படும். 6% வட்டி விகிதம், 25 ஆண்டுகளில் செலுத்தப்பட வேண்டும்.

உத்தேச திட்டம் போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்காக தண்டனையளிக்கப்பட்டவர்களுக்கு அம்பேபுஸ்ஸ மற்றும் வீரவில ஆகிய பகுதிகளில் விசேட பண்ணைகள் அமைக்கப்படும். அது சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும்.

சிறுநீரக நோயாளர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு 1,480 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

விசேட தேவையுடையவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அது 5000 ரூபாவாக அதிகரிக்கப்படும். அதற்கென 4,320 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்.

பல்கலைக்கழக மாணவர்களின் 50% க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், பெண் தொழிலாளர்கள் 30% க்கும் குறைவாகவே உள்ளனர். வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

100,000 க்கு மேற்பட்டோருக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. மொனராகலையில் மாத்திரம் 35,000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. இந்த வருடம் சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் 4 பில்லியன் ஒதுக்கீடு.

மீன் ஏற்றுமதி மூலம் 209 மில்லியன் ரூபாய் இலாபம் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது.

மொரகஹா கந்த திட்டத்திற்கு 12000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை.

கறுவாப்பட்டையை ஏற்றுமதி செய்யும் வகையில், அத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு 75 மில்லியன் ரூபாய் ஒதுக்க நடவடிக்கை.

தேசிய இளைஞர் சேவைகள் சபையின் உறுதிப்படுத்தப்பட்ட பயனாளிகளிகளுக்கு என்டபிரைஸஸ் கடன் திட்டத்தை பெற்றுக்கொடுக்கும் போது முக்கியத்துவம் வழங்கப்படும். இதுவரை 60,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இறப்பர் உற்பத்திக்கு 800 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தெங்கு உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை.

விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும். அநுராதபுரம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நடவடிக்கை மேம்படுத்தப்படும்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top