நியூசிலாந்தில் வெள்ளையின
கொலையாளியின்
வெறிச்செயலின் பின்னணி என்ன?
பதறும் உலக நாடுகள்
நியூசிலாந்தில் நேற்று
அப்பாவி முஸ்லிம்
மக்கள், வெள்ளையின
கொலையாளியினால் சுட்டுக்கொல்லப்பட்டமை உலகளாவிய
ரீதியில் பெரும்
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிரைஸ்சேர்ஜ் பகுதியிலுள்ள
இரு பள்ளிவாசல்களில்
கொலைவாதியி னால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி
பிரயோகம் காரணமாக
49 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் கோரச்
சம்பவம் நியூசிலாந்தில்
கறைபடித்த பயங்கரவாத
தாக்குதல் என
அந்நாட்டு பிரதமர்
ஜசிந்தா அடேன்
குறிப்பிட்டுள்ளார்.
மறுஅறிவித்தல் வரும்
வரை நியூசிலாந்தில்
தேசிய கொடி
அரைக்கம்பதில் பறக்க விடுப்படும் என அறிவித்துள்ளார்.
அத்துடன் கிரைஸ்சேர்ஜ்
பகுதியில் பலத்த
பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மறு அறிவித்தல்
வரும் பள்ளிவாசல்களை
மூடுமாறு அதன்
நிர்வாகத்தினருக்கு பாதுகாப்பு அதிகாரிகள்
அறிவித்துள்ளனர்.
கடும்போக்குவாத மத
வெறிகொண்ட கொலைகார நபரினால் இந்த
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல்கள்
தொடர வாய்ப்பு
உள்ளதாக அச்சம்
வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்
பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள்
மீது மிலேச்சத்தமான
முறையில் வெள்ளையின
கொலையாளி ஈவு இரக்கமின்றி தாக்குதல்
நடத்தியிருந்தான்.
தாக்குதல் நடத்திய
கொலையாளியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்த
வசனங்கள் தற்போது
பெரும் பதற்றத்தை
ஏற்படுத்தியுள்ளதாக நியூசிலாந்து தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மத ரீதியான
கடும்போக்கு சிந்தனை கொண்டமையினால் இந்த தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் எழுதப்பட்டுள்ள
வசனங்கள் மூலம்
உறுதி செய்யப்பட்டுள்ளது.
turkofagos என்ற கிரேக்க
மொழி வார்த்தைக்கு
"துருக்கி கொலைக்காரர்கள்" என பொருள்
-Miloš_Obilić- 1389ஆம் ஆண்டு
உதுமானிய சுல்தான்
முராத்-1 அவர்களை
படுகொலை செய்த
செர்பிய படைதளபதியின்
பெயர்
-John_Hunyadi - காண்ஸ்டாண்டிநோபுள் வெற்றிக்கு பின் 1456ம் ஆண்டு
நடைபெற்ற யுத்தத்தில்
சுல்தான் மஹ்மூத்
|| வின் படைக்கு
எதிராக போராடி
வெற்றிக்கொண்ட ஹங்கேரியின் இராணுவ தளபதி பெயர்
-Vienna_1683- உதுமானிய படை
வியன்னா போரில்
தோல்வியுற்ற ஆண்டு
இவை எல்லாம்
உதுமானிய கிலாஃபத்
திற்கு எதிராக
கிறிஸ்தவ உலகம்
பெற்ற வெற்றியின்
குறியீடுகள்
இவைமட்டுமல்லாமல், 'Refugees welcome to Hell' என அகதிகளுக்கு எதிரான
வெறுப்பு வாசகங்களும்
துப்பாக்கிகளில் குறியிடாக எழுதப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு எதிரான குரோத எண்ணங்களை இவருக்கு
ஊட்டி வளர்க்கப்பட்டுள்ளதாக
பலரும் தமது
ஆதங்கங்களை தெரிவித்துள்ளனர்.
நேற்று நடத்தப்பட்ட
கொடூர தாக்குதலில்
குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்அடைந்து
ஆபத்தான நிலையில்
உள்ளனர். இந்த
கோர சம்பவம்
உலக நாட்டு
மக்களை பெரும்
மன வேதனையில்
ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த
கொடூர தாக்குதலுக்கு
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜேர்மன் பிரான்ஸ்
உள்ளிட்ட உலக
நாட்டுத் தலைவர்கள்
கடும் கண்டனத்தை
வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க
ஆகியோரும் தமது
கண்டனங்களையும் ஆழ்ந்த இரங்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment