கல்முனை ஸாஹிறாக் கல்லூரிக்கு
ஆறு வருடங்களில் ஆறு அதிபர்கள்
முன்னாள் அமைச்சர்களான ஏ.ஆர்.மன்சூர், எம்.எச்.எம். அஷ்ரப்,
எம்.சீ.அஹமது காலத்தில் கல்முனை ஸாஹிறாக்
கல்லூரிக்கு அதிபர்களாகக் கடமையாற்றியவர்கள் தொடராக 9 வருடங்கள், 5 வருடங்கள் என
கடமை செய்திருந்த நிலையில் கடந்த ஆறு வருடங்களில் மாத்திரம் இக் கல்லூரிக்கு ஆறு
அதிபர்கள் கடமையேற்றுள்ளது கல்லூரி அதிபர்களின் நியமனத்தில் இங்குள்ள அரசியல்வாதிகள்
மாணவர்களின் கல்வியில் அக்கறை செலுத்தாது தங்கள் ஆதிக்கம் கல்லூரி அதிபர்
நியமனத்தில் இருக்க வேண்டும் கல்லூரியின் நிர்வாகம் தங்கள் கட்டுப்பாட்டுக்குக்
கீழ் இருந்து கொண்டிருக்க வேண்டும் என்று தூர சிந்தனையில்லாமல் செயல்பட்டதுதான் காரணமா? என இப்பிரதேச கல்வியலாளர்கள்
கேள்வி எழுப்புகின்றனர்
இக்கல்லூரியில் அதிபராக ஏ.எம்.ஹுஸைன்
(16.10.1989 – 21.04.1999) சுமார் 9 வருடங்களும் 6 மாதங்களும்
தொடராகக் கடமைசெய்து கல்லூரியினதும் மாணவர்களினதும் உயர்வுக்காகப் பாடுபட்டுழைத்தார்.
இதுபோன்று அதிபராக எம்.சீ.ஆதம்பாவா
( 01.02.1985 – 15.10.1989) சுமார் 4 வருடங்களும் 9
மாதங்களும் தொடராகக் கடமைசெய்து கல்லூரியினதும்
மாணவர்களினதும் உயர்வுக்காகப் பாடுபட்டுழைத்தார்.
எஸ்.எச்.எம்.ஜெமீல்
(04.03.1975 -25.10.1979) சுமார் 4 வருடங்களும்
7 மாதங்களும் தொடராகக் கடமைசெய்து கல்லூரியினதும் மாணவர்களினதும்
உயர்வுக்காகப் பாடுபட்டுழைத்தார்.
ஆனால் கடந்த
2012 ஆம் ஆண்டிற்குப் பின் எம்.எஸ்.எம்.ஹம்ஷா (2012/05/28 - 2012/05/28) ஏ.ஆதம்பாவா
(2012/05/29 - 2013/12/31), பீ.எம்.எம்.பதூறுதீன் (2014/01/01 - 2017/04/03), எம்.எஸ்.
முஹம்மத் (2017/04/04 - 2018/11/02) ஜாபீர் இஸ்மாயில்( 2018/11/03 ), முஹம்மத் முஜீன்
(2019/03/15) ஆகியோர் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் அதிபர் கதிரையில் இருந்துள்ளார்கள்.
இங்குள்ள அரசியல்வாதிகள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில்
அக்கறை செலுத்தாது தங்களுக்கு வாசியான அதிபரை கல்லூரிக்குள் கொண்டுவந்து கல்லூரி நிர்வாகத்தை
தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமே 2012 ஆம் ஆண்டிற்குப் பின்னர்
ஆறு வருடங்களில் மாத்திரம் இக் கல்லூரிக்கு ஆறு அதிபர்கள் கடமையேற்றுள்ளதற்கு காரணமாக
உள்ளதா என பெற்றோர்கள் கேள்வி எழுப்பி கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
பல்லாயிரக்கணக்கான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி மருத்துவர்கள்,
பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், என பல்துறைகளிலும் உருவாக்கி சாதனைகள் பல புரிந்த இக்கல்லூரிக்கு அதிபர் நியமனம்
செய்யும்போது இப்பிரதேசத்திலுள்ள கல்வியலாளர்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள், சிந்தனையுள்ள
பெற்றார்கள், சமூக நலன் விரும்பிகள் போன்றோரின் கருத்துக்களைப் பெற்று தூர நோக்குடன்
இபிரதேச அரசியல்வாதிகள் செயல்படுவதே இப்பிரதேச மாணவர்களின் எதிர்கால கல்வி முன்னேற்றத்திற்கு
சிறப்பானதாகும் என பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இதைவிடுத்து அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு தங்கள் வாசு
கருதி அதிபரைக் கொண்டுவந்து கல்லூரியில் அமர்த்துவது எதிர்கால எமது பிள்ளைகளின் கல்விக்கு செய்யும் துரோகமாகும்
எனவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்..
0 comments:
Post a Comment