இந்திய விமானியை விடுவிக்க வந்த
அந்தப் பெண் யார்?
பாகிஸ்தான்
இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர்
அபிநந்தன் விடுதலை
செய்யப்பட்டபோது, அவருடன் புகைப்படங்களில் இருந்த பெண்
அதிகாரி பற்றிய
விபரங்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான்
வெளிவிவகாரத்துறை அமைச்சில் இந்திய விவகாரங்களைக்
கையாளும் பிரிவில்
இயக்குநராகச் செயற்பட்டும்வரும் டொக்டர்.
ஃபரிஹா புக்தி ( Foreign Office India
Director Dr Fariha Bugti.) என்பவரே
குறித்த பெண்
அதிகாரியாவாரென இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்
அபிநந்தன் நேற்று
விடுதலை செய்யப்பட்டபோது,
இந்திய அதிகாரிகளிடம்
ஒப்படைப்பதற்காக அவர் வாகா எல்லைக்கு வருகை
தந்ததாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
இது
தொடர்பில் மேலும்
தெரியவருவதாவது,
பாகிஸ்தான்
இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டபோது,
பாகிஸ்தான் தரப்பிலிருந்து பெண் அதிகாரியொருவர்,
அபிநந்தனை இந்திய
அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தார்.
நேற்று
வெளியான அனைத்துப்
புகைப்படங்களிலும் அபிநந்தனுடன் சேர்ந்து
குறித்த பெண்
அதிகாரியும் இருந்ததுடன், அப்புகைப்படங்களைப்
பார்த்த அனைவர்
மத்தியிலும் அப்பெண் அதிகாரி யாரென்பது தொடர்பாகவும்
கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையிலேயே, அவர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான்
வெளிவிவகாரத்துறை அமைச்சில் இந்திய விவகாரங்களைக் கையாளும்
பிரிவில் இயக்குநராகச்
செயற்பட்டு வரும் டொக்டர். ஃபரிஹா
புக்தியே (Fariha Bugti) குறித்த பெண்
அதிகாரியாவார். இதன் காரணமாகவே, நேற்றிரவு அபிநந்தனை
இந்திய அதிகாரிகளிடம்
ஒப்படைப்பதற்காக அவர் வாகா எல்லைக்கு வந்துள்ளார்.
0 comments:
Post a Comment